ஆடுகளின் நல்ல மேய்ப்பன் THE GOOD SHEPHERD OF THE SHEEP மேடிசன் ஸ்குவேர் கார்டென், பீனிக்ஸ், அரிசோனா, அமெரிக்கா 57-03-08 நாம் ஜெபத்திற்காக சற்றுநேரம் நின்றவண்ணமாக நமது தலைகளைத் தாழ்த்துவோம். மிகவும் கிருபையுள்ள எங்கள் பரலோகப் பிதாவே, எங்களுக்காக நீர் செய்திருக்கும் உமது நன்மைகள் யாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்தும்படியாக இன்றிரவு உமது சமூகத்தில் வந்திருப்பது எங்களுக்குக் கிடைத்த ஒரு சிலாக்கியமாயுள்ளது. நீர் எங்களுக்குத் தருகிற ஆசீர்வாதங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களல்ல. ஆனால் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது என்ற வாக்குத்தத்தம் எங்களுக்கு உண்டு என்பதை அறிந்திருக்கிறோம். எங்கள் ஆத்துமாக்கள் எப்படியாக அந்த வார்த்தையின் பேரில் இளைப்பாறுகின்றன. நீர் உமது ஆசீர்வாதங்களை எங்கள் மேல் ஊற்றும்படி இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். உமது பரிசுத்தாவியானவர் ஒவ்வொரு இருதயத்திலும் வந்து எங்களுக்கு அவசியமானவை களை எங்களுக்குத் தருவாராக. எங்கள் இருதயங்கள் திறந்தபடியிருக்க நாங்கள் நின்று காத்துக் கொண்டிருக்கையில், இயேசுவின் நாமத்தில். ஆமென். உட்காரலாம். 2. நாளை காலையில், கர்த்தருக்குச் சித்தமானால்... இதன் முன்பக்கம் எதுவென்றும் பின்பக்கம் எதுவென்றும் எனக்குத் தெரியவில்லை. பொறியாளருக்கு அது தெரியுமானால், என்னுடைய தொண்டை கரகரப்பின் நிமித்தம், அவரால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு அதிகமாக அதை எடுத்து வரட்டும். உமக்கு நன்றி. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) காலை சிற்றுண்டி, ஊழியக்காரர்களுக்கான காலை சிற்றுண்டி உண்டு... தேவனுக்குச் சித்தமானால், பீனிக்ஸிலுள்ள ஒவ்வொரு ஊழியக் காரர்களும் அங்கே இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். நான் அவர்களிடம் சற்று பேச விரும்புகிறேன். எனவே சகோதரர்களே, ஒருவேளை உங்களால் கூடுமானால், அங்கேயிருக்க ஆயத்தம் செய்யுங்கள். அந்த இடம் எங்குள்ளது என்று எனக்குத் தெரியவில்லை. மில்லரின் சிற்றுண்டிசாலை (Miller’s Cafeteria)... அவர்கள் காலை சிற்றுண்டிக்கு ஒரு இடத்தை முன்பதிவு செய்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன். அது ஒன்பது மணிக்கு நடைபெறும், அப்படித் தானே, சகோதரன் க்ரூமர்-? ஒன்பது மணிக்கா-? ஒன்பது மணிக்குத்தான். 3. பிரசங்க பீடம் நகைச்சுவை பேசுவதற்கான இடமல்ல. ஆனால் சற்று முன்பு நான் தொலைபேசியில் கேட்ட ஒரு சிறு காரியம் என்னிடமுள்ளது, அது அப்படியே என்னை சந்தோஷப்படுத்தியது. 18 மாதமான ஒரு சிறு மகன் எனக்கிருக்கிறான், மனைவி இங்கே என்னோடு வெளியே இருக்கையில், அவனுடைய பாட்டி தான் அவனைக் கவனித்துக் கொள்கிறார்கள். தாயாரின் தொண்டை மிகவும் கரகரப்பாக இருந்து, அவர்களால் பேச முடியவில்லை, அவர்கள் என்ன விஷயம் என்று அறிய விரும்பினார்கள். குட்டி ஜோசப் போய் அவர்களை வீட்டுக்கு வெளியே பூட்டிபோட்டு விட்டானாம், அவர்களால் உள்ளே போக முடியாதிருந்ததாம், உள்ளே போக முடியவேயில்லையாம். சாவியும் இல்லை, சாவி உள்ளே இருந்ததாம்: அவனுக்கு வயது 18 மாதங்கள் தான், இறுதியில் அவனே கதவண்டை வந்து அவனாகவே அதைத் திறந்து அவர்களைத் திரும்ப உள்ளே விட வேண்டியிருந்ததாம். தேனே, உனக்குப் பிறகு அவன் அதை எடுத்துக்கொள்கிறானா-? நான் இன்றிரவில் அதற்கான பணத்தைச் செலுத்தி விடுகிறேன். ஓ, இங்கே இருப்பது மிகவும் நல்லது. என்னுடைய வீட்டிலே தரையில் பெரும் பனியாக இருப்பதாகவும், குளிராக இருப்பதாகவும் அவர்கள் என்னிடம் சொன்னார்கள். சகோதரன் சாத்மன் தம்முடைய வீட்டில் இருக்கிறார் என்று நம்புகிறேன், அவர் அன்றொரு இரவில் அழைத்த போது, ஐந்துக்கும் கீழே இருந்தது. எனவே வருடத்தின் இந்த நேரத்தில் இங்கே பீனிக்ஸை சுற்றிலும் குளிர் குறைவாக இருப்பதற்காக நீங்கள் எல்லாரும் அதிக நன்றி உள்ளவர்களாயிருக்கிறீர்கள். 4. இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், ஒரு சிறு தலைப்புக்காக, பரிசுத்த யோவான் சுவிசேஷம் 10-வது அதிகாரத்திலிருந்து வாசிக்கப் போகிறோம், ஒருக்கால் கர்த்தர் நமக்கு அந்த சூழலைத் தரலாம். பரிசுத்த யோவான் 10, 7-வது மற்றும் 14-வது வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். தொடர்ந்து 14-வது வசனத்தில்... நானே நல்ல மேய்ப்பன்; நான் என்னுடைய ஆடுகளை அறிந்தும், அவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன். இப்பொழுது, 7-வது வசனம் என்ன கூறுகிறது என்பதை நீங்கள் கவனிப்பீர்களானால்: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர் நல்ல மேய்ப்பர் என்று இங்கே கூறுகிறார். 5. கர்த்தராகிய இயேசுவைக் குறித்து பேசுவதைக் காட்டிலும் இன்றிரவு நம்மால் பேச முடிந்த பெரிதான காரியம் எதுவும் உண்டு என்று நான் நம்பவில்லை. நம்மால் பேச முடிந்த மிகப் பெரிய நபர் அவர் தான். நான் அவரைக்குறித்து பேசவும், அவரைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளவும் விரும்புகிறேன், ஏனென்றால் யாராவது சொல்ல முடிந்த சகலத்திற்கும் அவர் பாத்திரராய் இருக்கிறார். அவர் எனக்கும் மற்றவர்களுக்கும் செய்திருக்கிற எல்லாவற்றிற் காகவும் அவருக்கு செலுத்தும்படியான எனது நன்றியறிதலை எப்பொழுதாகிலும் வெளிப்படுத்தக் கூடிய எந்த வார்த்தையையும் எனது பேச்சுக்குரலோ, அல்லது எனது சிந்தனையிலோ நான் ஒருபோதும் கண்டதேயில்லை. நான் இன்றிரவு ‘ஆடுகளின் நல்ல மேய்ப்பனாக’ அவரைக் குறித்துப் பேச விரும்புகிறேன். ஆடாகிய அந்தச் சிறு மிருகத்தைக் குறித்து நாம் மிக அநேக காரியங்களைக் கற்றுக் கொள்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். நான் இப்படி சிந்தித்துக்கொண்டிருந்தேன், நாளை சிற்றுண்டிக்குப் பிறகு நான் தென் அரிசோனாவுக்கு துரிதமாக போக வேண்டியதில்லை என்றால், ஒருக்கால் கர்த்தருக்குச் சித்தமானால், "ஆட்டுக்குட்டியும் புறாவும்’ என்பதன் பேரில் பேச விரும்பினேன். அதன் பின் இன்றிரவிலேயே ஆட்டுக்குட்டியின் பேரில் பேசிவிடலாம் என்றும் அதனால் ஒரு வேளை நாளை இரவிலே அந்தப் பொருளை சுருக்கிக் கொள்ள முடியுமே என்று எண்ணினேன். 6. ஆடுகள் மூலமாக நாம் நிறைய காரியங்களைக் கற்றுக் கொள்கிறோம். நாம் அப்படியே அவைகளை உற்று நோக்கி அவைகளின் நடவடிக்கைகளை கவனிப்போமானால்... ஒரு ஆடானது பலிசெலுத்தப்படும் மிருகமாகும். அது சிறு அப்பாவியான (குற்றமற்ற, களங்கம் இல்லாத - மொழிபெயர்ப்பாளர்) மிருகமாகும், அது வழி தவறிப்போகும் போது முற்றிலும் உதவியற்ற நிலையில் இருக்கும். ஆகையால் தான் இயேசு நம்மை ஆடுகளுக்கு ஒப்பிட்டார் என்று நினைக்கிறேன், ஏனென்றால் சுற்றிலுமுள்ள அவைகளின் வழியை அவைகளால் கண்டு பிடிக்க முடிவதில்லை. அவைகள் தங்களை வழி நடத்த யாரோ ஒருவரை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. அவைகளால் ஒன்று மற்றொன்றை வழிநடத்த முடியாது. அவைகள் அதைச் செய்யாது. அது எனக்கு ஒரு காரியத்தை நிரூபித்துக் காட்டுகிறது; நாம் தேவனுடைய சுதந்தரத்தில் ஆடுகளுக்கு ஒப்பிடப்படுவோமானால், நம்மால் ஒருவர் மற்றவரை வழிநடத்த முடியாது. நாம் உதவியற்றவர்களாக இருக்கிறோம். ஆடுகளின் பெரிய மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவையே நாம் சார்ந்திருக்க வேண்டும். நான் ஒரு முறை இறைச்சிக்காக மிருகங்களை கொல்லுமிடத்தைக் கவனித்துப் பார்த்தேன்... அவர்கள் ஆடுகளை எவ்வாறு கொல்லுகிறார்கள் என்பதைக் குறித்து யாரோ ஒருவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆடுகளை தொழுவத்தை விட்டு வெளியே வரச்செய்து, அவர்கள் ஆடுகளைக் கொல்லும் இடமாகிய மென்சரிவு பாதைக்கு மேலேறி போகச் செய்ய அவர்கள் விரும்பும் போது, ஒரு வெள்ளாடு தான் அவைகளை அங்கே மேலே வழி நடத்திச் செல்லுமாம். அவைகள் அந்த வெள்ளாட்டை பின் தொடர்ந்து போகும். இந்த வெள்ளாடு அவைகளை மேலே கொல்லுமிடத்திற்கு வழி நடத்திச் சென்று, அதன் பிறகு அது அந்த பக்கத்துக்கு மேலே குதித்து விட்டு அந்த ஆடுகள் சரியாக தொடர்ந்து அவைகளின் மரணத்தை நோக்கி போகும்படி விட்டுவிடும். 7. ஒரு மனிதன் தன்னுடைய ஆடுகளை மிக நன்றாக அறிந்திராவிட்டால், ஒரு வெள்ளாட்டின் குரலுக்கும் ஒரு செம்மறியாட்டின் குரலுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை சொல்லுவது கடினம் தான். அவைகள் பெரிய அளவில் ஒன்று போலவே இருக்கிறது. ஆனால் அவைகளின் சுபாவம் அவைகள் எதுவென்று நிரூபிக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று அறிக்கை பண்ணுகிறவர் களோடும் உண்மையான கிறிஸ்தவர்களோடும் அது அவ்விதமாகத் தான் இருக்கிறது. வெள்ளாடு என்பது உலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அவர்கள் உங்களை தேவனை விட்டு நித்தியமாக பிரிக்கப்படும்படி சரியாக கீழே தவறான பாதையில் உங்களை வழி நடத்துவார்கள். அவர்கள் உங்களை தொல்லைக்குள்ளாக நடத்திவிடுவார்கள். எனவே நாம் ஆடுகளாக இருப்போமானால், நாம் எம்மாதிரியான மேய்ப்பனைப் பெற்றிருக்கிறோம் என்பதை கவனிப்பது நல்லது. ஆடுகள் ஒருவிதத்தில் சிறிய வேடிக்கையான சிருஷ்டிகளாகும். இன்றிரவு ஆடுகளைக் குறித்து நாம் கற்றுக்கொள்ளும் வேறொரு காரியம் இதோ. சீதோஷ்ண நிலையானது மிகவும் உஷ்ணமாக இருக்கும் போது, நீங்கள் எப்பொழுதாவது ஆடுகளைப் பார்த்திருக்கிறீர்களா-? அவைகள் அப்போது தங்களை வேறு பிரித்துக் கொள்ளாது, அவைகள் ஒன்று ஓரிடத்திலும், ஒன்று வேறொரு இடத்திலும் தான் இருக்கும். ஆனால் சரியாக நாளின் உஷ்ணமான (நேரத்தில்), அந்த ஆடுகள் எல்லாமே ஒரே கூட்டமாக நின்று கொண்டிருக்கும். அவைகள் என்ன செய்து கொண்டிருக்கும் என்று தெரியுமா-? அவைகள் ஒன்று மற்றொன்றுக்கு நிழலை உண்டாக்கிக் கொண்டிருக்கும். அவைகள் ஐக்கியத்தை உடையவைகளாக இருந்து கொண்டு இருக்கும். 8. உஷ்ணம் இருக்கும் போது, தேவனுடைய எல்லா ஆடுகளும், ஒன்று சேர்ந்து இருப்பார்களானால், அது நன்றாக இருக்காதா. சோதனைகள் மிகக் கடினமாக இருந்து, உஷ்ணமும் இருந்து, எல்லாமே எல்லாவிடங்களிலும் நடந்து கொண்டிருக்கும் போது, தேவனுடைய சிறு ஆடுகள் யாவும் அப்படியே ஒன்று சேர்ந்து இருப்பார்களானால், நாம் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொள்வதற்கு, ஒருவருக்கொருவர் நிழலின் குளிர்ச்சியையும், ஆதரவையும் கொண்டிருப்போமே. இப்பொழுது, யாரோ ஒருவர், "அது அவசியம் தானா, சகோதரன் பிரன்ஹாமே-?’ என்று கேட்டார். நிச்சயமாக அது அவசியம் தான். பிரச்சனைகள் கொழுந்துவிட்டு எரிந்து, உஷ்ணம் இருக்கும் போது, ஒரு உண்மையான நல்ல நம்பகமான நண்பனைக் கொண்டிருப்பதைப் போல எதுவுமில்லை, (அப்பொழுது) நீங்கள் இந்த நண்பரிடம் சென்று, உட்கார்ந்து, அப்படியே அதை அவர்களிடம் புரியும்படி சொல்­, தனிப்பட்ட நம்பிக்கையில் அதை கலந்தாலோசித்து, அதன் பிறகு முழங்கால்படியிட்டு ஒருமித்து ஜெபம் பண்ணி, இந்த நபர் நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு நல்ல மனிதர் அல்லது ஒரு நல்ல பெண்மணி என்று அறிந்து கொள்ளலாம். ஓ, அதைச் செய்வது நன்றாக இருக்கும். "வழக்காடுவோம், வாருங்கள்,’ என்று வேதவாக்கியம் கூறுகிறது, அல்லது, "ஒன்று சேர்ந்திருப்போம், வாருங்கள்’ என்று. மேலும் ஆடுகள் ஒரு குளிரான தேசத்தில் இருப்பதை நான் காணும்போது, நான் வேறொரு காரியத்தைக் கவனித்திருக்கிறேன். பனிப்புயல் வரும்போது, எல்லா ஆடுகளும், வீசும் காற்றை தடுக்கும்படி, அந்த எல்லா சிறு ஆடுகளும் வயலின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வந்து, ஒன்றாக ஒரே கூட்டமாக நெருங்கி வரும்; அப்பொழுது அது ஒன்றையொன்று வெது வெதுப்பாக வைத்துக்கொள்ளும். ஒவ்வொரு சரீரத்திலிருந்தும் வரும் வெப்பமானது மற்றது வெதுவெதுப்பாக இருக்க உதவும். 9. சபையானது மிக குளிர்ந்து போய் அலட்சியப் போக்குடையதாய் ஆகும் போது, தேவனுடைய ஆடுகள் சற்றே ஒருமித்து நெருக்கமாக வந்து ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். மிக நல்ல கிறிஸ்தவ ஐக்கியத்தின் நேசமானது, ஓ, அது எவ்வளவு திடமாக உணரும்படி செய்கிறது. தாவீது முதலாவது சங்கீதத்தில் அதைக்குறித்து பேசி இருக்கிறான், அவன், "பரியாசக்காரர் உட்காருமிடத்தில் உட்காராமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்காலின் ஓரமாய் நடப்பட்டு, இலைகள் உதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வது எதுவாக இருந்தாலும், அது செழிக்கும்’ என்று சொன்னான். 10. ஒரு சிறு இன்பச்சுற்றுலா போவதற்காக, நீங்கள் வெளியே, குறிப்பாக நான் பிறந்த நாட்டுப் புறத்திற்கு போயிருப்பீர்களானால், இன்பச்சுற்றுலா செல்ல ஒரு சிறு நிழலிடத்தை நாங்கள் கொண்டிருக்க வேண்டியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, ஒரு சிறிய மரமானது சென்ற வருடம் தான் யாரோ ஒருவரால் குச்சியாக வெளியே நீட்டிக் கொண்டு வந்திருக்குமானால், நாம் அங்கே அதிக நிழலை அனுபவிப்போம் என்று மிக அதிக நம்பிக்கையை நம்மால் கொண்டிருந்திருக்க முடியாது. ஆனால் பெரிய பழமையான நிமிர்ந்து நிற்கும் கருவா­ மரம் நிற்கிற இடத்திற்குப் போய்ப் பாருங்கள், அங்கு பரிசோதனைகளும் சோதனைகளும் (இருக்க), கொப்புகள் முன்னும் பின்னுமாக முன்னும் பின்னுமாக இங்குமங்கும் ஆடிக்கொண்டு, அந்த வேர்கள் கீழே தரையில் ஆழமாக போகும் அளவுக்கு, அந்தப் பழமையான மரத்தை அசைத்துக் கொண்டிருக்கிறது. அவள் இன்னுமாக அங்கே நின்று கொண்டிருப்பாள் என்பதை நீங்கள் மிக நன்றாக நம்ப முடியும். அவ்விதமாகத்தான் புயலுக்குப் பின்னும் நீடித்திருக்கும், தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு பழமையான பரிசுத்தவானிடம் நான் வர விரும்புகிறேன், அவர்களுடைய வேர்கள் தேவனுடைய அன்பிற்குள் ஆழமாக இன்னும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறது, அவ்விதமான ஒரு நபரிடம் வந்து சற்று நேரம் ஐக்கியம் கொள்வது என்பது என்னவாக குறித்துக் காட்டுகிறது: அது திடமான நன்றியறிதலின் உணர்வு. இப்பொழுது, அது ஒரு வினோதமான காரியமாக இருந்தது; பரிசுத்த யோவான் 10-ல், இயேசு, "நானே வாசல்’ என்று கூறுகிறார். அவர் எப்படி ஒரு வாசலாக இருந்து ஒரு மனிதராகவும் இருக்க முடிந்தது என்று நான் எப்போதுமே வியந்ததுண்டு. அது வழக்கமாக என்னை கஷ்டப்படுத்தும். அவர் எப்படி ஒரு வாசலாக இருந்து கொண்டு இன்னுமாக ஒரு மனிதராகவும் இருக்க முடிந்தது-? நான் கிழக்கத்திய நாடுகளில் இருந்த போது, அந்த வேதவாக்கியம் எதை அர்த்தப் படுத்துகிறது என்பதை கண்டுகொண்டேன். அவர் இங்கே, "நானே வாசல். எனக்கு முன்னே வருகிறவர்கள் எல்லாரும் கொள்ளைக்காரர்களாயிருக்கிறார்கள்” என்றார். அப்பொழுது அது எப்படி என்று வியப்படைந்தேன். 11. கிழக்கத்திய நாடுகளில், அவர்கள் தங்கள் ஆடுகளை எவ்விதம் கவனித்துக் கொள்கிறார்கள், மேய்ப்பன் அவைகளை இரவில் உள்ளே கொண்டு வந்து, ஒவ்வொன்றும் உள்ளே இருக்கிறதா என்று பார்க்க அவைகள் ஒவ்வொன்றையும் அவன் எண்ணிப் பார்க்கிறான். ஒன்று காணாமல் போயிருந்தாலும், அவன் வெளியே வனாந்தரங்களுக்கு உள்ளாகவோ, அல்லது நாள் முழுவதும் அவன் மேய்த்திருந்த எல்லாவிடங்களுக்குள்ளும் போய், அந்த ஆட்டைக் கண்டு பிடித்து அதை தன்னுடைய தோள்களின் மேல் வைத்து, அதை உள்ளே கொண்டு வரும் மட்டும் அவன் படுக்க மாட்டான். அதன் பிறகு எல்லாமும் ஆடுகளை அடைக்கும் வேலியிடப்பட்ட அந்த பட்டியில் இருக்கும் போது, மேய்ப்பன் தாமே அந்த வேலியின் இடைவெளியில் (திறப்பில்) படுத்துக்கொள்கிறான். அவனே ஆட்டுத்தொழுவத்தின் வாசலாக இருக்கிறான். அங்கே வேறு எந்த வழியுமில்லை; அது ஒரு கால் நடைபட்டி, அதன் மேல் ஒரு மூடி இருக்கும். எதுவும் அந்த மேய்ப்பனுக்கு குறுக்கே கடந்துசெல்லும் முன்பாக அது அந்த ஆடுகளிடம் உள்ளே வர முடியாது. நாம் அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பாதுகாப்பிற்குள் தீங்கு நேராமல் தடுக்கப்பட்டு இருக்கும் போது, அதை அறிவது என்பது என்னவொரு மன நிம்மதியாகவும், என்னவொரு மகிழ்ச்சியூட்டுகிற காரியமாகவும் உள்ளது, அவர் வாசலாக ஆகிவிடுவதால், உங்களுக்கு எதுவுமே நேரிட முடியாது. அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அதெல்லாமே அந்த மேய்ப்பர் மூலமாகத் தான் வந்தாக வேண்டும். அது வியாதியாக இருந்தால், அது உங்களைத் திருத்துவதற்காக நேரிடலாம். அது சத்துருவுக்கு விரோதமான ஒரு சாட்சிக்காக இருக்கலாம். அது கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக நிகழலாம். ஆனால் எதுவும் வரும்படி அவர் அனுமதித்தாலொழிய எதுவுமே உங்களுக்கு வரமுடியாது. அவரே ஆட்டுத்தொழுவத்தின் வாசலாக இருக்கிறார். 12. வருகிறவர்கள் எல்லாரும் கொள்ளைக்காரர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது, உங்களைப் பிடிக்க முயற்சித்து, அவருடைய ஆட்டுப்பட்டியை விட்டு உங்களை வெளியே கொண்டு செல்ல முயன்று, எப்பொழுதாவது அவரிடம் வருகிற எல்லாருமே கொள்ளைக்காரர்களாகவும், தீயவர்களாகவும் இருந்து, உங்களை அவருடைய தொழுவத்திலிருந்து எடுத்துக்கொண்டு போக முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களால் உங்களிடம் வர முடியாது. அதை வெளியே கத்தி குரலெழுப்புவது எனக்குப் பிடிக்கும். நீங்கள் தேவனுடைய ஆட்டுத்தொழுவத்தில் இருப்பீர்களானால், எதுவுமே உங்களை தொல்லைப்படுத்த முடியாது. அவர் தாமே வாசலாக இருக்கிறார், வேறு எந்த வழியும் கிடையாது. எல்லாமே அவரால் அனுமதிக்கப்பட்டாக வேண்டும். நீங்கள் சிலசமயங்களில், "எனக்கு ஏன் வியாதி வருகிறது-?’ என்று கேட்கலாம். அது ஒருக்கால் அவருடைய மகிமைக்காக இருக்கலாம். ஒரு சமயம் அவர்கள் ஒரு குருடனைக் கடந்து போனபோது, சீஷர்கள், "யார் பாவம் செய்தது, இந்த மனிதனா அல்லது இவன் பெற்றோர்களா-?’ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, "இந்த சம்பவத்தில், இவனோ இவனுடைய பெற்றோரோ பாவம் செய்யவில்லை, ஆனால் தேவனுடைய கிரியைகள் வெளிப்படுவதற்காகத் தான்’ என்றார். 13. அவன் அதை கொஞ்சமே அறிந்தவனாய், தன்னுடைய வாலிப நாட்கள் முழுவதும் குருடாக இருந்து வந்தான். அவன் பிறவிக் குருடனாயிருந்தான், தன்னுடைய வாலிப நாட்கள் முழுவதும் புரிந்துகொள்ள அவனுக்கு கடினமாக இருந்து வந்தது. ஆனால் சிறிது காலம் கழிந்த பிறகு, அது கர்த்தராகிய இயேசுவைப் பற்றிய ஒரு சாட்சிக்காகத் தான் நேரிட்டது என்பதை கண்டு கொண்டான். இப்பொழுது, தேவன் அவ்விதமாக காரியங்களைச் செய்கிறார். இப்பொழுது, இந்த ஆடுகளைக் குறித்த வேறொரு காரியம் என்னவென்றால், அவைகள் ஒரு மேய்ப்பனை உடையவைகளாக இருக்க வேண்டுமா என்பது தான். அந்த ஆடுகளை சொந்தமாக வைத்திருக்கும் ஒரு மனிதன், ஒரு மேய்ப்பனைக் கொள்ள போகும் போது, அவன்... வேண்டியதாயிருந்தது. அவன் தன்னுடைய ஆடுகளை நேசிக்கும் காரணத்தினால், பெற்றுக் கொள்ளக் கூடியதிலேயே மிகச்சிறந்த மேய்ப்பனை அவன் பெற்றுக் கொள்ளும் வரை அவன் போய் கண்டுபிடிக்க தேடிக்கொண்டிருப்பான். ஆடுகளை எவ்விதம் கவனித்துக் கொள்வது என்பதை அறிந்துகொள்வதில் இந்த மனிதன் நிச்சயமாக பிரத்தியேகமான பயிற்சி பெற்றிருந்தாக வேண்டும். அவைகள் புசிக்கும் ஆகாரத்தின் வகையை அவன் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அங்கே ஆடுகளுக்கான ஆகாரம் நிறைய இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும், நீங்கள் உங்கள் ஆடுகளுக்குக் கொடுக்கும் நிறைய ஆகாரம் அதைக் கொன்று போடும். கர்த்தராகிய இயேசுவாகிய சரியான வகை மேய்ப்பரை தமது ஆடுகள் பெற்றுக் கொள்ள தேவன் போதுமான அக்கறை உள்ளவராயிருந்தார் என்பதற்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆடுகளுக்கான ஆகாரம் எதுவென்று அவருக்குத் தெரியும். ஆடுகளுக்கான ஆகாரம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? அது தான் தேவனுடைய வார்த்தையாகும். "மனுஷன்... பிழைக்க மாட்டான்.’ நான் அதை சற்றே மாற்றுவேனாக; "ஆடுகள் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கும்.’ தேவனுடைய ஆடுகள் தேவனுடைய வார்த்தையின் மூலமாகத் தான் போஷிக்கப்படுகின்றன. உங்களுக்குள்ளிருக்கும் பரிசுத்த ஆவியானவர், அது தான் உங்களை ஆடாக ஆக்குகிறது, அவர் அக்கறை உள்ளவராய் வார்த்தையைக் கொண்டு தான் போஷிக்கிறார். அவர் வார்த்தையைக் கொண்டு மாத்திரமே போஷிக்கிறார். வார்தைக்குப் புறம்பே எதையாவது நீங்கள் தொழுவத்திற்குள் போடுவீர்களானால், அவர் அதை முற்றிலும் ஒருபுறமாக தூக்கி எறிந்துவிட்டு, அது அங்கேயே கிடக்கும்படி விட்டுவிடுவார். அது மிகவும் திடமானது. நான் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா அல்லது தெரியாதா என்று நான் அறியேன். 14. ஆனால் அவன் ஆடுகளுக்கான ஆகாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்வான். மந்தையின் மகத்தான மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவையே தேவன் தேர்ந்தெடுத்து, அவருக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். இப்பொழுது, வேறொரு காரியம் என்னவென்றால், அவன் தன்னுடைய ஆடுகளை வழி நடத்த போகக்கூடும் முன்பாக, அந்த ஆடுகள் மேய்ப்பனின் சத்தத்தை அறிந்திருக்க வேண்டும். அந்த மேய்ப்பன்... வேறொரு மேய்ப்பன் அழைக்கக் கூடுமானால், அந்த ஆடுகள் ஒரு போதும் அவனுக்கு செவி கொடுக்காது. அந்த ஒருவனைத் தவிர வேறு எந்த மேய்ப்பனுக்கும் அவன் ஒரு போதும் கவனம் செலுத்த மாட்டான். இயற்கையான மண்டலத்தில், அந்த மேய்ப்பனுக்கு ஏதாகிலும் சம்பவித்தோ, துப்பாக்கியால் சுடப்பட்டாலோ அல்லது பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, ஓ, இந்த ஆடுகளை மறுபடியும் கவனிக்க யாரோ ஒருவரைக் கண்டுபிடிப்பது என்பது அந்த தேசங்களிலுள்ள ஆடு வளர்க்கும் ஒருவனுக்கு என்னவொரு நேரமாக இருக்கும். அவன் நிச்சயமாக கனிவும் அமைதியும் கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் நிச்சயமாக அன்புள்ளவனாக இருக்க வேண்டும். அவன் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட வகையான சத்தத்தை கொண்டிருக்க வேண்டும். இயேசு, "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கும்’ என்று சொல்லியிருக்கிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், "என் ஆடுகள் என் வார்த்தைக்கு செவி கொடுக்கும்; அதற்கு புறம்பேயுள்ள எதையும் அவைகள் பின்பற்றாது.’ 15. உண்மையான மேய்ப்பன் ஆடுகளுக்காக தன்னுடைய ஜீவனையும் ஒப்புக் கொடுத்து விடுகிறான். கூலிக்கு அமர்த்தப்பட்டவனோ செவி சாய்க்கவே மாட்டான். அவன் தப்பி ஓடி ஆடுகளையோ விட்டுவிடுவான். ஆனால் உண்மையான மேய்ப்பனோ ஆடுகளோடு தரித்து இருக்கிறான். "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் எப்போதுமே நான் உங்களுடனேகூட இருக்கிறேன்’ என்று அவர் இந்த வார்த்தைகளை சொல்லியிருக்கிறார் என்பதற்காக நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். தேவனுக்கு ஒரு ஆடாவது இருக்கும் காலம் வரையில், அந்த ஆட்டை வழிநடத்த ஒரு மேய்ப்பன் தேவனுக்குண்டு. நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்: தேவனுடைய ஆடுகள் தேவனுடைய மேய்ப்பனாலே வழிநடத்தப் படுகின்றன. அது எவ்வளவு காலம் இருக்கும்-? "இனி கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள், உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களோடிருந்து, உங்களை வழி நடத்தி, உங்களை போஷித்து, உங்களுக்கு வழிகாட்டி, உங்களைக் கவனித்துக் கொள்வேன்.’ தேவனுடைய மேய்ப்பர், அவர் ஒருவனைத் தாழ்த்தி, வேறொருவனை உயர்த்த வேண்டியதில்லை. ஏனென்றால் அந்த விதத்தில் மனிதனால் தேவனுடைய மேய்ப்பராக இருக்க முடியாது. ஒருவர் மரிக்கிறார்; வேறொருவர் அவருடைய இடத்தை எடுத்துக் கொள்கிறார். ஆனால் இந்த ஒரு மேய்ப்பரோ, மந்தையின் மேலுள்ள இம்மகத்தான மேய்ப்பரோ, ஒருவிசை தமது ஜீவனைக் கொடுத்து விட்டார், அது அழிவற்றதாக ஆகிவிட்டது. இப்பொழுது அவருடைய ஆவி ஒரு போதும் கொல்லப்பட முடியாதது. அவருடைய மனித சரீரமானது (corporal body) மகிமையிலிருந்து வந்து, அவர் தாவீதின் சிங்காசத்தில் உட்கார்ந்து, எல்லா ஆட்டுக்குட்டிகளும் அவரைச் சூழ இருக்கும் மட்டுமாக, அவர் ஒரு நிலையான, நிரந்தரமான தலைவராகவும் ஆடுகளைப் போஷிப்பவராகவும் இருக்கிறார். ஓ, கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம். நான் அதைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன், தமது ஜீவனை அபாத்திரமான ஆடுகளாகிய நமக்காக கொடுத்த மந்தையின் மகத்தான மேய்ப்பர்... 16. ஒருமுறை தன்னுடைய ஆட்டின் காலை முறித்துப் போட்ட மேய்ப்பனின் கதையை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதைக் குறித்து அநேக சிறு கதைகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்த மேய்ப்பனிடம், "இந்த ஆடு மலையிலிருந்து விழுந்து இவ்வாறு காலை ஒடித்துக்கொண்டதா-?’ என்று கேட்கப்பட்டது. அவனோ, "இல்லை’ என்றான். "என்ன சம்பவித்தது-?’ என்று கேட்கப்பட்டது. அவன், "நான் தான் அதனுடைய காலை முறித்தேன்’ என்றான். "நீர் ஏன் அதனுடைய காலை முறித்தீர்-? நீர் ஒரு கொடூரமான மேய்ப்பனா-?’ என்று கேட்கப்பட்டது. அவன், "இல்லை, நான் இந்த ஆட்டை நேசிக்கிறேன். ஆனால் இந்த ஆடு என்னை விட்டு தூரமாக ஓடிப்போய்க்கொண்டிருந்தது. இது தொடர்ந்து தானாகவே வெளியே சுற்றித்திரிந்து (வழிதவறிப் – மொழி பெயர்ப்பாளர்)’ போய்க் கொண்டிருந்தது. ஆடுகளின் சுபாவம் எனக்குத் தெரியும். இவைகள் மிக தூரமாக விலகிப் போகுமானால், ஓநாய் இவைகளைப் பிடித்துக் கொள்ளும் என்பது எனக்குத் தெரியும். எனவே இதை எனது மார்போடு இழுத்துக்கொள்ளவும், கொஞ்சம் பிரத்தியேகமான ஆகாரத்தை இதற்குக் கொடுக்கவும், இதை என்னோடு கூட வைத்துக் கொள்ள இந்த ஆட்டின் காலை நான் முறிக்க வேண்டியிருந்தது. இதனுடைய கால் சுகமாகும் போது, இனி இது என்னைவிட்டு ஒருபோதும் விலகிப்போகாது, நான் இதற்கு மிகவும் அன்பாக இருப்பேன்’ என்றான். 17. தேவன் நம்மை சற்றே தம்முடைய மார்போடு கொண்டுவந்து, அவர் இன்னும் கர்த்தராகிய இயேசுவாக இருக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்ட தமது தெய்வீக உயிர்த்தெழுதலின் வல்லமையினுடைய பிரத்தியேகமான சிறு தொடுதலை நமக்குத் தரும்படி, அவர் சில சமயங்களில் நம்மை நோயினாலும், வியாதிகளினாலும், துன்பத்தினாலும் கடுமையாக சுகமில்லாமல் ஆக்க வேண்டியிருக்கிறது. தேவனால் எப்பொழுதாவது சுகமடைந்த ஒரு மனிதன் தேவன் என்னவாக இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறான். அவன் இருக்க வேண்டிய இடத்தைவிட்டு விலகிப்போக விரும்பவேமாட்டான். யாக்கோபு அதைத் தெளிவு படுத்துகிறான்; அவன், "விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கும்; தேவன் அவர்களை எழுப்புவார்; அவர்கள் பாவங்கள் செய்திருப்பார்களானால், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்’ என்றான். தேவனுடைய மேய்ப்பருக்கு தம்முடைய ஆடுகளை எவ்விதம் கவனித்துக் கொள்வது என்று தெரியும். தாயாரே, அந்தச் சிறு குழந்தை மரணத்தினால் உங்கள் கரங்களை விட்டு பறிக்கப்பட்ட போது, நீங்கள் சில சமயங்களில் வியப்படைகிறீர்கள். ஆடுகளோடுள்ள சிறு கதையானது அதை வைத்தும் சொல்லப்படுகிறது. ஒரு ஓவியம் தீட்டுபவரால் வரையப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் ஒரு-ஒரு ஓவியம் அங்கே இருந்தது. அவருடைய பெயர் எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்டை, சிறு ஆட்டுக்குட்டியை தமது கரத்தில் வைத்திருந்தார். அந்த தாயோ (தாய் ஆடோ - மொழிபெயர்ப்பாளர்) மேலே நோக்கிப் பார்த்தபடி, நெடுக பின்தொடர்ந்து போய்க் கொண்டு, தன்னுடைய கண்ணை அவர் மேலேயே வைத்திருந்தது. ஓவியராகிய அம்மனிதன் இந்தக் குறிப்பிட்ட நேரத்தில், அந்த மேய்ப்பனைக் கண்டு, அருகில் சென்று, அந்தச் சிறு ஆட்டுக்குட்டியை சுமந்து வரும் அந்த மேய்ப்பனைப் பார்த்து, "நீர் ஏன் அந்த ஆட்டுக்குட்டியை சுமந்து வருகிறீர்-? அது முடமாகிவிட்டதா-?’ என்று கேட்டார். "இல்லை.’ "அந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன பிரச்சினை-?’ என்று கேட்டார். 18. அதற்கு, "ஆட்டுக்குட்டியிடம் எந்த தவறுமில்லை; தவறு இந்த தாயாகிய பெண் ஆட்டிடம் தான். இது இனியும் என் மேல் கவனம் செலுத்தாமல் அவ்வண்ணமாக இருந்தது. இது இனி நான் சொல்வதைக் கேட்காது. எனவே நான் கரம் நீட்டி இதனுடைய ஆட்டுக்குட்டியை தூக்கி எடுக்க வேண்டியதாயிற்று, இப்பொழுதோ இது நாள் முழுவதும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறது’ என்றார். சில சமயங்களில் தேவன் அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும் இந்தப் பரிதாபமான சிறிய தாய்மார்கள், மதுபான கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சிகளுக்கு ஓடிக் கொண்டு, இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்து, அந்தச் சிறு குழந்தையை தவறான வழியில் வளர்க்கத் தொடங்குகிறார்கள், சில சமயங்களில் உங்களை மேலே நோக்கிப் பார்க்கும்படி செய்ய இயேசு அந்த ஆட்டுக்குட்டியை எடுக்க வேண்டி இருக்கலாம். அப்போதும் நீங்கள் அதற்குச் செவி கொடாவிட்டால், ஓநாய் உங்களைப் பிடித்துக் கொள்ளும். அப்போது நீங்கள் போய் விடுவீர்கள். ஓ, நாம் ஆடுகளைக் குறித்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். மேய்ப்பனைக் குறித்த வேறொரு காரியம் என்னவென்றால், மேய்ப்பன் எப்போதுமே கடமையில் இருப்பான். ஆடுகளின் மேய்ப்பன் இரவும் பகலும் அவைகளோடு இருப்பான் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களா-? 19. கொஞ்ச காலத்திற்கு முன்பு, மேலே வேட்டையாடும் கொலராடோவில் இருந்து, கவனித்துக் கொண்டிருந்தேன் - நாங்கள் ஆடு மலை (Sheep Mountain) என்று அழைப்பதற்கு மறுபக்கத்தில் மேலே சில ஆடுகள் புல் மேய அவர்கள் அனுமதித்திருந்தார்கள். அங்கே பின்னாலிருந்து அந்த மேய்ப்பர்களை நான் கவனித்தேன், ஆடுகளை போஷிப்பவர்களாகிய, அந்த வாலிபர்களில் சிலர் பெரிய நீளமான தாடி வைத்திருந்தார்கள். அவர்கள் இரவும் பகலும் அந்த ஆடுகளோடு இருந்தார்கள். அவர்கள் எப்போதுமே கடமையில் இருந்தார்கள். இயேசு பிறந்த போது, அங்கே ஒரு ஆட்டுக்குட்டி பிறந்த போது, மேய்ப்பர்கள் அதைக் கண்டு பிடிக்க உடனடியாக தேடிப்போன நேரத்தில், இரவில் தங்களுடைய மந்தையை விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களை அவர்களுக்கு தெரியுமா. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று தெரிகிறதா-? அந்த மேய்ப்பர்கள் ஆட்டுக்குட்டிகளைத் தேடிக் கொண்டு இருந்தார்கள். எந்த... ஒருக்கால் மேய்ப்பர்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கலாம். உங்களுடைய-உங்களுடைய பெண் ஆடுகள் குட்டிகளை ஈனும் போது, அப்பொழுது அது எப்போதும் இருந்ததிலேயே அதிக பிரத்தியேகமானதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். மேய்ப்பன் நிச்சயமாக தன்னுடைய ஆடுகளைவிட்டு தூரமாகப் போக முடியாது. அவைகள் குட்டிகளை ஈன்று கொண்டிருக்கும் போது, அவைகளை பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், அவன் வெளியிடத்தில் பயன்படுத்தும் உடைகள் வைக்கும் தன்னுடைய பையை (camp-bag) எடுத்துக்கொண்டு, சரியாக அவைகள் மத்தியில் படுத்துக்கொள்கிறான். 20. அது எதை அர்த்தப்படுத்துகிறது-? நாம் பழமைபாணியிலான எழுப்புதலைக் கொண்டு இருந்து, ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் ஆட்டுக்குட்டிகள் பிறக்கும் போது, மேய்ப்பரோ சரியாக தமது மந்தையின் நடுவில் படுத்துக் கொண்டு, அந்தச் சிறு ஆட்டுக்குட்டிகள் சரியான விதத்தில் இராஜ்யத்திற்குள் வருகின்றனவா என்று காண கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் இரவும் பகலும் அலுவலில் இருக்கிறார் என்பதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன். அவர், "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை என்றென்றைக்கும் கைவிடுவதுமில்லை. உலகத்தின் முடிவுபரியந்தம், எப்போதும் நான் உங்களுடனே கூட இருப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார். தாவீது சங்கீதங்களில், "நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், அவர் அங்கேயும் இருக்கிறார்’ என்று சொன்னான். ஓ, நீங்கள் எங்கேயிருந்தாலும் பரவாயில்லை... சாச்சடங்கு பொறுப்பாளர் (வெட்டியான் - மொழிபெயர்ப்பாளர்) உங்களைத் தரைக்கு கீழே வைத்து உங்களுக்கு மேலே ஆறடி மண்ணை வாரியிட்டாலும், அந்த ஆட்டை அவரால் மேய்ப்பரிலிருந்து ஒருபோதும் மறைத்து வைக்க முடியாது. நீங்கள் எங்கே படுத்திருக்கிறீர்கள் என்பதை அவர் துல்லியமாக அறிந்து கொள்கிறார், நீங்கள் குறியிடப்படுகிறீர்கள். ஏதோவொரு மகிமையான நாளில், அவர் அழைக்கும் போது, நான் மறுமொழி கூறுவேன். ஓ, எவ்வளவு அற்புதமாயுள்ளது. ஆடுகள் அவருடைய சத்தத்தை அறிந்து கொள்கின்றன; அவைகள் அந்நியரைப் பின்தொடராது. 21. ஏன் மேய்ப்பன் எல்லா நேரமும் அலுவலில் இருந்தாக வேண்டும்-? தன்னுடைய ஆடுகளில் எதுவும் இழக்கப்பட்டு போகவில்லை என்பதில் அவன் நிச்சயமுடையவனாய் இருந்தாக வேண்டும். அதைக்குறித்து உங்களுக்கு சந்தோஷமில்லையா-? மேய்ப்பன் ஒரு ஆட்டை இழப்பான் என்றால், அது அந்த மேய்ப்பன் மேல் உள்ள ஒரு பழிச் சொல்லாக (reproach) இருக்கும். "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஒருபோதும் நியாயத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.’ மேய்ப்பர்கள் தன்னுடைய ஆடுகளை இழந்து போக மாட்டார்கள். இப்பொழுது, நீங்கள் ஒரு ஆடாக இருந்தால், சரி... "பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிற யாவரையும் நான் புறம்பே தள்ளுவதில்லை. ஆனால் நான் அவனுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பேன்.’ சாச்சடங்கு பொறுப்பாளர் (undertaker - வெட்டியான் - மொழிபெயர்ப்பாளர்) அவனை மண்ணுக்குள் வைத்தாலும், எனது ஆடாகிய அவன், என் சத்தத்தைக் கேட்பான், நான் அவனை கடைசி நாளில் எழுப்புவேன். ஜீவனுள்ள தேவனுக்கு துதி உண்டாவதாக. "என் ஆடுகள் என் சத்தத்திற்கு செவிகொடுக்கின்றன.’ இயேசு, "அந்நாளில், பிரேதக்குழிக்குள் இருக்கிற அனைவரும் அந்த மகத்தான மேய்ப்பருடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள் (அல்லேலூயா.), நித்திய ஜீவனிடம் வெளியே வருவார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ஓ, ஆடுகளின் மேய்ப்பர் வருகிற அந்த மகத்தான நாளை நோக்கி. 22. துயரங்களின் கண்ணீர்கள் ஒருபோதும் அந்த மேய்ப்பரை தூரமாக வைக்க முடியாது. அவர் லாசருவின் அழுகிப்போன (சரீரம் வைக்கப்பட்ட) அந்த கல்லறையில் அதை நிரூபித்துக் காட்டினார். லாசரு அவருடைய சிறு ஆட்டுக்குட்டிகளில் ஒன்றாக இருந்தான். அவன் ஒரு குழிக்கு அடியில், சரீரத்திலே வைக்கப்பட்டிருந்தான், ஒரு கல் அதன் மேல் உருட்டி வைக்கப் பட்டிருந்தது; அவனுடைய சரீரமானது அழுகி நாற்றமடித்துக் கொண்டிருந்தது; மூக்கு உள்ளே விழுந்திருந்தது; தோல் புழுக்கள் அவனை முழுவதுமாக தின்று கொண்டிருந்தன. ஆனால் பிரதான மேய்ப்பர் மேலே கல்லறைக்கு வந்தார். அவர் தமது ஆட்டின் பெயரைக் குறிப்பிட்டு அறிந்து இருக்கிறார். இப்பொழுது அவர் உங்களுடைய பெயரைச் சொல்லி உங்களைக் கூப்பிடுவாரானால், நீங்கள் பிரதியுத்தரம் சொல்லுங்கள். அவர் கூப்பிடும் போது, நான் அவருக்கு மறுமொழி கூறும் ஒரு நேரம் வரப்போகிறதாக தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறான். லாசரு 4-நாட்கள் மரித்தவனாயிருந்தான். அவனுடைய சரீரமானது அழுகிப் போயிருந்தது. ஆனால் மேய்ப்பர் பேசின போது, அழிவு தன்னுடைய எஜமானை அறிந்திருந்தது. நான்கு நாட்கள் பிரயாணமாக போயிருந்த ஆத்துமாவானது அந்த சரீரத்திற்குள் திரும்பி வந்தது. பதனிடப்பட்டிருந்த அந்த சரீரத்தில் எந்த இரத்தமும் இல்லாமல், உயிரணுக்கள் உடைந்து போயிருந்தன. அவன் கல்லறைக்குள் அழுகிப் போயிருந்தான். ஆனால் ஜீவனின் மேய்ப்பர் தம்முடைய ஆட்டுக்குட்டியின் (His-Lamb) பெயரை உரைத்த போது, அவருடைய ஆட்டுக்கு ட்டியானது உரத்த பலமான சத்தமெழுப்பி, "இதோ இருக்கிறேன்’ என்றது. 23. ஓ, அவர் ஒரு அற்புதமான மேய்ப்பராயிருக்கிறார். அவரே உங்களைப் போஷிப்பாராக. அவர் தம்முடைய வார்த்தையைக் கொண்டு தான் உங்களைப் போஷிப்பார். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் மூலமாகவே ஜீவிக்கிறார். மந்தையின் அம்மகத்தான மேய்ப்பர்... நிச்சயமாக. அவரால் ஒன்றையும் இழந்து விட முடியாது. (அப்படியானால்) அது ஒரு அவமானமாக இருக்குமே. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, அவ்விதம் தான் நீர் சொல்லவருகிறீரா-?’ என்று கேட்கலாம். அவ்விதமாகத் தான் வேதாகமம் கூறுகிறது. பாருங்கள். எகிப்திலிருந்து வரும் வழியில் தேவன் இஸ்ரவேலரிடம், "நான் உங்களுக்கு பாலஸ்தீனாவைக் கொடுத்து விட்டேன்’ என்றார். இப்பொழுது, அவரே அங்கு போய் முழு காரியத்தையும் வெளியே துரத்தி விட்டு, அவர்கள் எல்லாரையும் ஒரு கொள்ளை நோயைக் கொண்டு பலவந்தமாக வெளியேற்றி, அவர்கள் எல்லாரையும் மொத்தமாக கொன்று போட்டிருக்க முடியும். அவரே அங்கு போய் அவர்கள் மத்தியில் திகிலை அனுப்பி, அவர்களை தேசத்தைவிட்டே துரத்தியிருக்கக் கூடும். ஆனால் அவரோ, "இஸ்ரவேலரே, இது உங்கள் உடையது. நீங்கள் போய் அதைப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்றார். அவர்கள் தாங்கள் மிதித்த ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் சண்டையிட வேண்டியிருந்தது. மகத்தான மேய்ப்பருடைய புஸ்தகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அவருடைய ஆடுகளுக்குத் தான். ஆனால், சகோதரனே, அவர் ஒரு போதும் இறங்கி வந்து அதை உங்களை விட்டு விரட்டமாட்டார்; அந்த வாக்குத்தத்தத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் நீங்கள் தான் சண்டையிட்டாக வேண்டும், ஆனால் அது உங்களுடையது. அது உங்களுக்குச் சொந்தமானது. 24. இம்மகத்தான மேய்ப்பரின் ஓர் பரிபூரண முன்னடையாளமாயிருந்த மோசே... அவர்கள் கீழே யோர்தானில் மரணத்தை நோக்கி இறங்கி, அலைகள் புரண்டுகொண்டிருந்தபோது, அவர்கள் மரணமாகிய கடலை நோக்கி வந்த போது, என்ன செய்தார்கள்-? தேவன் ஒரு வழியை உண்டாக்கினார். மகத்தான மேய்ப்பனாகிய மோசே, ஒவ்வொரு உண்மையான ஆட்டுக்குட்டியையும் எகிப்திலிருந்து பாலஸ்தீனாவை நோக்கி மொத்த தூரமும் வழிநடத்திக் கொண்டு வந்தான். அவன் ஒரு போதும் அவைகளில் ஒன்றையும் இழந்து போகவில்லை. அவர்கள் பசியடையவோ, அல்லது அவர்களுடைய வஸ்திரங்கள் உடுத்துக் கிழிந்துபோகவும் கூட இல்லை. மேய்ப்பனாகிய மோசே அவர்களை வழிநடத்தினான். நிச்சயமாக. அவன் கிறிஸ்துவுக்கு ஒரு முன்னடையாளமாயிருந்தான். நிச்சயமாக. பின்தொடர்ந்து போகிறவர்கள் ஒரு போதும் இழக்கப்பட்டு போவதில்லை. மேய்ப்பருக்கு பின்செல்லுங்கள். இப்பொழுது, அங்கே பல ஜாதியான ஜனங்கள் இருந்தார்கள் என்று நாம் இப்போது தான் பேசி முடித்தோம். நீங்கள், "அவர்கள் வனாந்தரத்தில் விழுந்தார்களே’ என்று சொன்னீர்கள். சரிதான், ஆனால் உண்மையான ஆடுகள் நேராக வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு போனார்களே, அந்த ஆடுகள். எம்மாதிரியான ஆகாரத்தைப் புசிக்க வேண்டுமென்று அவர்களுக்குத் தெரியும். பத்து பேராகிய அந்தக் கூட்டம் எல்லாம், திரும்பி வந்து, "நம்மால் அதைக் கைப்பற்ற முடியாது; நம்மால் அதை எடுத்துக் கொள்ள முடியாது’ என்று சொன்ன போது, என்ன தடைகள் இருக்கின்றன என்று தான் அவர்கள் நோக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் சூழ்நிலையைத்தான் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். 25. ஆனால் யோசுவா மற்றும் காலேப் என்னும் பெயருடைய இரண்டு சிறு ஆட்டுக்குட்டிகள் அங்கே நின்றுகொண்டு, "தேவன் அவ்வாறு சொல்லியிருக்கிறார்; நம்மால் அதைச் செய்ய முடியும்’ என்று தங்களுடைய உச்சக்குரலில் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். நிச்சயமாக, நம்மால் கூடும். அவர்கள் மேய்ப்பரை பின்பற்றிக் கொண்டிருந்தார்கள். தேவன் தம்முடைய ஆடுகளை வழிநடத்துவார். "நானே ஆட்டுத்தொழுவத்தின் மேய்ப்பன்.’ கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. நான் ஆடுகளை பெரிய அளவில் கவனித்துப் பார்ப்பதுண்டு. ஒரு சமயம் நான் வேறொரு நாட்டில் இருந்த போது, ஒரு சிறு பிரிட்டிஷ் ஜீப் வண்டியில் ஒரு மனிதனோடு பயணம் செய்து கொண்டிருந்தேன். அங்கே தென் பாகத்திலுள்ள வழியிலே, ஒரு பட்டணத்தினூடாக நான் போய்க் கொண்டிருந்தேன். திடீரென்று, போக்குவரத்து போலீசார் ஒரு சிறிய விசிலை ஊத, ஒவ்வொரு காரும் முற்றிலும் அசையாமல் நிறுத்தப்பட்டதைக் கண்டேன். அந்தப் பட்டணத்தின் மேயர் தான் வந்து கொண்டிருக்கிறாரோ என்று நினைத்தேன். எது எல்லாவற்றையும் நிறுத்தியிருக்க முடியும்-? நான் அந்த மனிதனிடம், "என்ன நடந்து கொண்டிருக்கிறது-?’ என்று கேட்டேன். அவர், "நாம் ஜீப்பின் தடுப்பானில் நின்று பார்ப்போம்’ என்றார். 26. அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? அது ஒரு மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளோடு கூட அந்தப் பட்டணத்தினூடாக வந்து கொண்டிருந்ததாகும், எல்லாமே அவைகள் கடந்து போக முதலிடம் கொடுத்தன. சகோதரனே, அது ஒரு விசித்திர காட்சியாக இருந்தது. அப்போது நான், "இந்நாட்களில் ஏதோவொன்றில், மந்தையின் மகத்தான மேய்ப்பர் வரும் போது, இழிவாகக் கருதப்பட்ட அந்தச் சிறு ஒருகூட்ட பரிசுத்த உருளையர்கள், அவர்கள் சந்துக்களிலும் மற்ற எல்லாவற்றிலும் உதைத்து தள்ளப்பட்டார்கள், ஆனால் ஏதோவொரு நாளில் மந்தையின் மகத்தான மேய்ப்பர் தமது ஆடுகளை பாலஸ்தீன வீதிகளினூடாக வழி நடத்திக் கொண்டு போகையில், உலகமானது ஒரு பக்கமாக நின்று கொண்டு, அந்த நன்னடத்தையைப் பார்த்துக் கொண்டிருக்கும்’ என்று நினைத்து, "அப்படிப்பட்ட எதையும் நான் என்னுடைய ஜீவியத்தில் ஒருக்காலும் கண்டதேயில்லை’ என்றேன். அவர், "அவர் ஒரு மேய்ப்பன்; இதனூடாகப் போக சட்டப்படியான அனுமதி (முன்னுரிமை - மொழி பெயர்ப்பாளர்) அவருக்கு உள்ளது’ என்றார். எனது மேலாளராகிய திரு.பாக்ஸ்டர் அவர்கள் (வழக்கமாக... இப்பொழுது பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள ஒரு பெரிய சபையில் அவர் மேய்ப்பராயிருக்கிறார்.), ஜார்ஜ் மன்னர் தேசத்தினூடாக வந்தபோது, அந்நேரத்தில் நாங்கள் அங்கே மேலே இருந்தோம். தீரமான அருமை மனிதராகிய, காலஞ்சென்ற ஜார்ஜ் மன்னர், அவர்கள் கீழே அந்த மூலையின் அருகில் நின்று கொண்டிருந்த போது... ஜார்ஜ் மன்னருக்கு வயிற்றுக்கோளாறு இருந்தது, மேலும் அவருக்கு மைய நரம்பு மண்டலம் தொடர்பான நாட்பட்ட நோயிருந்தது (multiple sclerosis). அதற்காகத்தான் நான் அவருக்கு ஜெபிக்க வரும்படி எனக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். கர்த்தர் அதிலிருந்து அவரைச் சுகமாக்கினார். 27. அப்போது, அவர் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அந்நாளில் மிகவும் வியாதிப்பட்டிருந்தார், அவருக்கு அரச குடும்பத்து இரத்தம் இருந்தது என்பதை அவர் காண்பித்தார். அவர் காரில் அமர்ந்திருந்தார்; நீங்கள் ஒரு போதும் அறிந்திருக்க மாட்டீர்கள். ஏன்-? அவர் ஒரு மன்னராயிருந்தார். அந்த அழகான இராணி தம்முடைய அழகான நீலநிற ஆடையில், அவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார். இந்த மகத்தான பெரிய கனடா தேசத்தவராகிய எனது நண்பர் நின்று கொண்டிருந்த இடமாகிய இந்தக் குறிப்பிட்ட சந்திப்பு முனையை அது கடந்து போகையில், அவர் தமது தலையைத் தாழ்த்தி மிக ஊக்கத்தோடே அகமகிழத் தொடங்கி, தம்முடைய கரங்களை இவ்விதமாக மேலே உயர்த்தி அழத் தொடங்கினார். நான் கவனித்துவிட்டு, "என்ன தவறு நேர்ந்தது-?’ என்று கேட்டேன். அவர், "அதோ என்னுடைய மன்னர் போகிறார்; அவர்கள், ‘தேவன் மன்னரை காப்பாற்று வாராக’ என்று இசைத்துக் கொண்டிருந்த போது, என்னுடைய இருதயம் துள்ளிக் கொண்டு இருந்தது’ என்றார். 28. நான், ‘பூமிக்குரிய ஒரு மன்னர் கடந்துபோகும்போது, பிரிட்டிஷ் முடியரசின் கொடியின் கீழ் ஜீவிக்கும் ஒரு மனிதனை அது அவ்விதமாக உணரச்செய்யக் கூடுமானால், இந்நாட்களில் ஒன்றில் நம்முடைய இராஜாதி இராஜாவானவர் முழுவதும் வஸ்திரம் தரித்து தன்னை ஆயத்தம் செய்துள்ள தமது அழகான மணவாட்டியோடு கூட பக்கமாக பயணம் செய்து கடந்து வரும் போது, அது என்ன செய்யப் போகிறது. அவர் தமது கரங்களில் வடுக்களையும் ஆணிகளால் உண்டான சுவடுகளையும் கொண்டிருக்கிற போதிலும், அவர் ஒரு இராஜாவாக, ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் நிற்பார். நான் அந்நாளை காண விரும்புகிறேன்’ என்று நினைத்தேன். நான் அடிக்கடி வியப்படைவதுண்டு, இயேசு ஒரு மாம்ச சரீரத்தில் (physical body) திரும்பி வருகிற போது, இம்மகத்தான தொடக்க விழா (inauguration) நடந்து கொண்டிருப்பதை அந்த தூதர்கள் காணும் போது... ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்பு, திரு.மூர் அவர்களும், திரு. பிரவுன் அவர்களும் நானுமாக ரூஸ்வெல்ட் அணையிலிருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் இயற்கையையும் அதைப் போன்ற மற்றவைகளையும் சுற்றிப் பார்க்கவும், ஐக்கியம் கொள்ளவும் அங்கே மேலே இருந்தோம். இரத்தத்தினாலே மீட்பு சம்பந்தப்பட்ட எங்களால் கூடுமான மிகச்சிறந்த பழைய பாடல்களைப் பாடத் தொடங்கினோம். அது அந்த பாலைவன குன்றுகளினூடாக அப்படியே தொடர்ந்து தொடர்ந்து போய்க் கொண்டே இருந்தது போன்று காணப்பட்டது. 29. அப்போது நான், ‘சகோதரன் மூர் அவர்களே, ஏதோவொரு நாளில், இயேசு வரும் போது, எல்லா காலங்களிலும் மீட்கப்பட்ட யாவரும் இந்த பூமியின் மேற்பரப்பில் நின்று பாடிக் கொண்டும், கிருபையால் இரட்சிக்கப்பட்ட கதையைச் சொல்லிக் கொண்டும், அந்த மீட்பின் பாடல்களைப் பாடிக் கொண்டும் இருக்கும் போது, தூதர்கள் தலைகளைத் தாழ்த்தியவாறு பூமிக்கு சற்று அப்பால் நின்று கொண்டு நாம் எதைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாதிருப்பார்கள் என்பதைக் குறித்த ஒரு உண்மையான தரிசனமல்ல, ஆனால் அதைக் குறித்த ஒரு தரிசனத்தை நான் காண்கிறேன்’ என்றேன். அவர்களுக்கு மீட்பு ஒரு போதும் அவசியமாயிருக்கவில்லை. இழக்கப்பட்டு போயிருந்தவர்கள் நாம் தான். அவர் மீட்டுக் கொண்டவர்கள் நாம் தான். அவைகள், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன்களே (beings), ஆனால் நாம் தான் இழக்கப்பட்டு இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறோம். மீட்பைக் குறித்து நம்மால் பாட முடியும். அது என்னவொரு நாளாக இருக்கும். இந்த மேய்ப்பனைக் குறித்த இந்த குறிப்பிட்ட சூழலில்... ஒருக்கால் நமக்கு இன்னும் கூடுதலாக சிறிது நேரம் இருக்கையில், நான் உங்களோடு சிறிது தூரமாகப் போகலாம். அந்த மேய்ப்பன் ஒரு தெருவினூடாக வந்துகொண்டு இருப்பதை கவனித்தேன். அந்த தெருவில்... பாலஸ்தீனாவிலும் மற்றும் வெவ்வேறு தேசங்களிலும், கிழக்கத்திய நாடுகள் எங்கும், நாம் செய்வது போன்று, அவர்கள் தங்கள் ஆகாரங்களை எடுத்து அவைகளை அருமையான கண்ணாடியாலான வாடிக்கையாளர் சேவை முகப்பிடங்களில் (glass counters) வைப்பதில்லை. ஏராளமான வணிக விளைபொருட்களில் கொஞ்சத்தை உயர்த்தி (கூட்டி) வைத்திருப்பார்கள், அல்லது வெறுமனே ஒரு கூட்டம் பழங்களையும் மற்றும் பொருட்களையும் சரியாக வீதிகளிலேயே சம மட்டமான தரையில் பரப்பி வைத்திருப்பார்கள். 30. இதோ அந்த மேய்ப்பன் வந்து, சரியாக அந்த இடங்களில் ஒன்றை நோக்கிப் போகிறான். அப்போது நான், ‘இப்பொழுது எதிர்பார்த்தது போலவே நீங்கள் சரியாக ஒரு அமளியைக் கொண்டிருக்கப் போகிறீர்கள்’ என்று எண்ணினேன். அதைக் கவனிக்க நாங்கள் பக்கத்திலே நெடுக ஓட்டிச்செல்கையில், வினோதமான காரியம் என்னவென்றால், ஆடுகளுக்கு விருப்பமான பேரிக்காய் மற்றும் காய்கறிகள் போன்ற பழங்களும் மற்றும் நல்ல சுவையுள்ள காரியங்களுமாகிய அந்தப் பெரிய மதில்களுக்கு இடையே அதனூடாக அந்த மேய்ப்பன் நேராக கீழே போய்க்கொண்டிருந்த போது, அந்த ஆடுகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு தாவிச் செல்லும் என்பது போன்று நிச்சயமாகவே தோன்றியது, ஆனால் அவைகளோ அந்த மேய்ப்பனை மிக நெருக்கமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தன, அவைகள் ஒரு போதும் வலதுபுறமோ அல்லது இடதுபுறமோ நோக்கிப் பார்க்கவேயில்லை. அவைகள் சரியாக ஒவ்வொரு சோதனையினூடாகவும் நடந்து மேய்ப்பனுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தன. நான், ‘ஓ தேவனே, தொழுவத்திலுள்ள உண்மையாகவே மறுபடியும் பிறந்த ஒரு ஆடானது இந்த ஜீவியத்தின் சோதனைகளினூடாக அந்த மேய்ப்பரைப் பின்பற்றிப் போகும். ‘என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்து கொள்ளும்’’ என்று எண்ணினேன். அவன் வெறுமனே அவைகளிடம் பேசினான். அந்தப் பெரும் துயரமான நேரங்களிலும், அந்தப் பெரிய சோதனைகளிலும், அந்தச் சிறு ஆடுகள் இடதுபுறமும் வலதுபுறமும் நோக்கிப் பார்த்துக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன். ஓர் ஆட்டுக்குட்டியானது ஒருமுறை அவ்வாறு செய்ய முயற்சிக்குமானால், தாயானது அதை சற்றே முழங்கையால் இடித்து கவனத்தைத் திருப்பி இருக்கும். நம்முடைய குழந்தைகள் தவறு செய்யும்போது, முழங்கையால் இடித்து கவனத்தைத் திருப்பும் இன்னும் சில பழமைப் பாணியிலான தாய்மார்கள் தான் இன்றிரவு நமக்குத் தேவையாயிருக்கிறது. 31. அந்த மேய்ப்பன் இவ்விதமாக வழியைவிட்டு சற்று வெளியே போவதைக் கவனித்தேன். அவன் இவ்விதம் வழியைவிட்டு விலகி, திரும்பவும் வந்தாலும், ஒவ்வொரு ஆடும் அவனைப் பின்பற்றி, சரி நேராக அதே காலடியில் போய்க் கொண்டிருந்தன. அவைகள் அங்கே மிகத் துரிதமாக உள்ளும் புறம்புமாக போய்க் கொண்டே, ஒவ்வொன்றும் இடையில் நிற்காமல் இந்த மற்றவைகளைப் பின்தொடர்ந்து போய்க் கொண்டேயிருந்தன. ஓ, சகோதரனே, ஒழுங்கின்றி போவது ஒரு ஆடல்ல; சோதனையினிமித்தம் ஒரு பக்கமாகப் போவது ஒரு வெள்ளாடு தான். வெளியே போய் ஒரு பேரிக்காயையோ, அல்லது தன்னால் பெற முடிந்த எதுவாக இருந்தாலும், அதை விரைவாக எடுத்துக்கொள்வது ஒரு வெள்ளாடு தான், செம்மறியாடல்ல; அது வெள்ளாடு தான். விழுந்துபோகிற ஒரே காரியம் என்னவென்றால் தள்ளாடி நடந்து முன்னும் பின்னும் அசைகிறவர்கள் தான். அதன்பிறகு நான் அத்தேசத்தை விட்டு புறப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு (கூட) இல்லை, அப்பொழுது சாலை நெடுக நான் கவனித்துக் கொண்டிருந்த போது, அங்கே வெளியில் ஒரு மனிதன் இருந்தார், அவர் ஒரு பெருங்கூட்டமான மிருகங்களை மேய்த்துக் கொண்டிருந்தார். அங்கே கழுதைகளும், அதோடு கூட கால்நடைகளும், வெள்ளாடுகளும், செம்மறியாடுகளும் இருப்பதைக் கவனித்தேன். அப்போது நான், ‘அந்த மனிதன் யாரென்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள்-?’ என்று கேட்டேன். அதற்கு என்னோடிருந்த மனிதர், ‘அவர் ஒரு மேய்ப்பர்’ என்றார். ‘ஓ,’ நான், ‘ஒரு மேய்ப்பரா-?’ என்றேன். ‘ஆமாம்.’ ‘நல்லது,’ நான், ‘அப்படியானால் ஒரு மேய்ப்பர் என்பவர் ஆடுகளுக்காக மாத்திரம் தான் என்று அர்த்தமில்லையா-?’ என்றேன். அவர், ‘இல்லை, ‘மேய்ப்பர்’ என்பதற்கு ‘போஷிக்கும் ஒருவர்’ என்று அர்த்தம்’ என்றார். அதற்கு நான், ‘நல்லது, அந்த செம்மறியாடுகளும், வெள்ளாடுகளும், கழுதைகளும், மற்றும் எல்லாமும் ஒரே மேய்ச்சல் நிலத்திலிருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனவே’ என்றேன். ‘அது சரிதான்’ என்றார். ‘நல்லது,’ நான், ‘அப்படியானால் அந்த மேய்ப்பன் கனிவும் தாராள மனப்பான்மையும் உடையவன்’ என்றேன். 32. ‘ஆமாம்.’ ஆனால் அவர், ‘எது அவருடையது என்று சொல்வதற்கான வழி என்னவென்றால், இரவு நேரம் வந்து இருளாகிவிடும் போது, அந்த மேய்ப்பர் அழைப்பார், அப்போது மேய்ச்சல் நிலத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆடும் அவரிடம் வந்து விடும், அவர் அந்த ஆடுகளை அந்தப் பெரிய பண்ணைக் கட்டிடம் அல்லது தொழுவத்திற்குள் கொண்டு சென்று, அவைகளுக்கு முன்னால் படுத்துக் கொள்வார். ஆனால் கோவேறு கழுதைகளும், கால்நடைகளும், மற்றும் வெள்ளாடுகளும் மேய்ச்சல் நிலத்திலேயே தங்கியிருக்கும்’ என்றார். நான், ‘மன்னியுங்கள், சகோதரனே, நான் சரியாக இப்பொழுதே என்னுடைய மேய்ப்பரிடம் ஒரு வார்த்தை பேச விரும்புகிறேன்’ என்றேன். எந்த வேத சாஸ்திரத்தைக் குறித்தோ, எந்தப் பெரிய கல்விப் பட்டத்தைக் குறித்தோ, அல்லது மகத்தான நபரைக் குறித்தோ எனக்குக் கவலையில்லை. நான் இருக்க வேண்டுமென்று விரும்புவது எல்லாம் ஒரு தாழ்மையான ஆடாக இருப்பது தான், இராக்காலமானது என் நெற்றியின் குறுக்கே அடிக்க ஆரம்பிக்கும்போது, அவர் என்னை உள்ளே அழைக்க நான் விரும்புகிறேன். அவைகள் இந்த இதே ஆகாரத்தைப் புசிக்கும் கோவேறு கழுதைகளாகவோ, வெள்ளாடுகளாகவோ மற்ற எல்லாமாகவோ இருக்கலாம், ஆனால் இரவு நேரத்தில் மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளை மாத்திரமே புகலிடத்திற்கு கொண்டு போகிறான். சகோதரனே, நீங்கள் கிறிஸ்தவத்தை போன்று நடிப்பீர்களானால், உலகத்திலே சுற்றிலும் வாத்தைப் போல் குடித்து ஒவ்வொரு முறை குடித்த பின் தலையை உயர்த்திக் கொண்டும் நீரில் குதித்தாடிக்கொண்டுமிருக்கிற கோவேறு கழுதையைப் போன்ற ஆவியையோ, அல்லது வெள்ளாட்டைப் போன்ற ஆவியையோ நீங்கள் பெற்றிருப்பீர்களானால், இந்நாட்களில் ஒன்றில் இரவு வருகிறது, அப்போது நீங்கள் அந்த மேய்ப்பரின் சத்தத்தை அறிந்து கொள்ளமாட்டீர்கள் (and you won’t know the Shepherds voice). இன்றிரவில் நீங்கள் ஏன் அதனோடு பழக்கப்படுத்திக்கொண்டு, ஒரு ஆடாக இருப்பது என்ன என்பதை புரிந்துகொள்ளக் கூடாது. நாம் இதன் பேரில் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கையில், நம்முடைய தலைகளை நாம் தாழ்த்துவோம். 33. நீங்கள் சிந்தித்துப்பார்க்க நான் விரும்புகிறேன். நீங்கள், ‘ஓ, சகோதரன் பிரன்ஹாமே, நான் தேவனுடைய வார்த்தையை கேட்டு மகிழ்கிறேன்’ என்று கூறலாம். ஆம், சகோதரனே, மழையானது நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பொழிகிறது. உங்களுடைய பருத்திச் செடியும், உங்களுடைய தோட்டமும் வானத்திலிருந்து பொழிகிற தண்ணீரைப் பெற்றுக் கொள்ள எவ்வளவு அதிகம் களிகூருகின்றனவோ அதுபோன்று, இங்கே வெளியில் உள்ள களைச்செடியும் அவ்வளவு அதிகம் நன்கு களிகூருகிறது. அது அதே தண்ணீர் தான். ஆனால் கடைசி காலத்தில், என்ன சம்பவிக்கிறது-? அவர் தூதர்களை அனுப்பி, எல்லா முட்புதர்களையும், எல்லா மோசமான களைச்செடிகளையும், அருவருக்கத்தக்க காரியங் ளையும் சேகரித்து, அவைகள் அக்கினிக்குள் போடப்படுகிறது. ஆனால் அந்த கோதுமைக்கும் தானியத்திற்கும் என்ன சம்பவிக்கிறது-? அது களஞ்சியத்திற்கு கொண்டு போகப்படுகிறது. நிலத்தின் மேல் புல் மேய்ந்து கொண்டிருந்த கோவேறு கழுதைகளும், கழுதைகளும், ஒட்டகங்களும், மற்ற எல்லா மிருகங்களும், அவைகள் நிச்சயமாகவே ஒரே வகையான ஆகாரத்தைத் தான் புசிக்கின்றன, சபைக்குப் போகிற ஒவ்வொரு மனிதனும் அவ்வாறு தான் புசிக்கிறான். ஆனால் சூரியன் மறைந்து கொண்டு இருக்கும் போது, அழைக்கப்படுவது ஆடுகள் மட்டுமே. சகோதரனே, இன்றிரவு நீ ஒரு ஆடாக இருக்கிறாயா-? அன்பு சகோதரியே, நீ தேவனுடைய சிறு ஆட்டுக்குட்டிகளில் ஒருத்தியா-? அதைக் குறித்த நிச்சயம் உனக்கு இல்லை என்றால், நாம் சரியாக இப்பொழுதே அதை நிச்சயப் படுத்திக்கொள்வோம். நீங்கள் உங்கள் கரத்தை கிறிஸ்துவை நோக்கி மேலே உயர்த்தி, ‘கிறிஸ்துவே, இதன் மூலமாக, நான் உம்மை எனது இரட்சகராக இப்பொழுது ஏற்றுக் கொள்கிறேன்; என்னிடத்தில் இரக்கமாயிரும்’ என்று கூறுவீர்களா-? 34. இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும், ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. இங்கே கீழே அடித்தளத்தில் யாரோ ஒருவர், வேறு யாரோ ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்தி, ‘கிறிஸ்துவே...’ என்று கூறுகிறார். ஐயா, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. ‘நான் இப்பொழுது ஒரு ஆடாக விரும்புகிறேன். நான் சபையைச் சேர்ந்தவனாயிருந்தும், எனக்குள் இருக்கிற இந்த ஆவி மிக எளிதில் கோபம் கொள்வதும், தீயதாகவும், அலட்சியப் போக்குடையதாகவும் இருக்கிறது என்பதில் நிச்சயமாய் இருக்கிறேன்...’ வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ‘நான் சபையைச் சேர்ந்திருந்த போதிலும்...’ அங்கே பின்னால் இருக்கும் சீமாட்டியாகிய உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. ‘நான் சபையைச் சேர்ந்திருந்து, எனது பெயரும் புத்தகத்தில் இருந்த போதிலும், எனக்குள் இருக்கும் ஆவி சரியாக இல்லை என்று நான் அறிந்திருக்கிறேன்.’ இங்கேயிருக்கும் ஸ்பெயின் நாட்டு சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. மேலே எனது வலது பக்கத்தை நோக்கிய பால்கனிகளில் (மாடி முகப்புகளில் - மொழி பெயர்ப்பாளர்), யாரோ ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்தி, ‘கர்த்தராகிய இயேசுவே, நீர் என்னை மாற்ற வேண்டுமென்று நான் விரும்புகிறேன்’ என்று சொல்லுவீர்களா-? வாலிபனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ‘சரியாக நான் இருக்கும் இடத்திலேயே என்னை மாற்றும்.’ அங்கே மேலேயிருக்கும் உம்மை தேவன் ஆசீர்வதிப்பாராக. ‘சரியாக நான் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கையிலே என்னை மாற்றும். இந்தப் பழைய ஆவியை என்னிலிருந்து எடுத்து விட்டு உமது ஆடுகளில் ஒன்றாக என்னை ஆக்கும். கர்த்தாவே, நான் உம்மை நேசிக்கிறேன். எனது சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருக்கும் போது, யோர்தானின் மறுபக்கத்தில் என்னை நோக்கி கூவிக்கொண்டிருக்கும் தேவனுடைய புறாவின் மென்மையான சத்தத்தைக் கேட்க நான் விரும்புகிறேன். இந்தச் செய்திக்குப் பிறகு இந்த பயபக்தியுடன் கூடிய கணத்தில் நான் இப்பொழுது எனது கரத்தை உயர்த்துகிறேன். நீர் எனது மேய்ப்பராக இருக்க நான் விரும்புகிறேன். கர்த்தாவே, நான் உம்மை பின்தொடர்ந்து வருவேன்.’ ‘ஆமாம், மரண நிழல்களின் பள்ளத்தாக்கினூடாக நடந்தாலும், எந்த பொல்லாங்குக்கும் பயப்படேன்: நீர் என்னோடு இருக்கிறீர்.’ மேய்ப்பர் வழிநடத்திக்கொண்டிருக்கும் காலம் வரை, எல்லாமே சரியாக இருக்கும். நாங்கள் முடித்து ஜெபம் செய்வதற்கு முன்பாக இப்பொழுது வேறொருவர் உண்டா-? இது உங்களுடைய ஆத்துமா என்பது ஞாபகம் இருக்கட்டும். நான் இந்தச் செய்தியை உங்களிடம் கூறுகிறேன். நீங்கள் தேவனுடைய ஆடாக இல்லை என்றால், நீங்கள் மேய்ப்பரின் சத்தத்தை அறிந்து கொள்ள மாட்டீர்கள். வெறுமனே எந்தச் சிறு காரியமும் உங்களைப் பாழ்படுத்தலாம். 35. ஆனால் நீங்கள் ஆடாக இருந்தால், மேய்ப்பரின் சத்தத்தை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என்றாவது ஒருநாளில் ஒவ்வொரு பூமிக்குரிய சத்தமும் நின்று போகும் போது, அம்மா கூக்குரல் எழுப்புவதையும், அப்பா அலறுவதையும், கணவன் கதறுவதையும், மனைவி உரத்த குரலில் கத்துவதையும், சகோதரர்கள் அலறுவதையும் நீங்கள் கேட்கும் போது; அந்த சத்தங்கள் சீக்கிரத்தில் மெல்ல மெல்லவும் பின்பு முற்றிலுமாகவும் குறைந்து போய்விடும். ஆனால் அப்போது நதியின் மறுபக்கத்தில் அந்த மகத்தான மேய்ப்பர், ‘வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே’ என்று மென்மையான கனிவான குரலில் பேசுவதை உங்களால் கேட்க முடியுமா-? உங்களுக்கு அவர் வேண்டுமா-? அவர் உங்கள் இருதயத்தைத் தட்டுவாரானால், நீங்கள் வேண்டுமென்று கேட்கும்படியாக அவர் உங்களுடைய வராய் இருக்கிறார். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக, யாரோ ஒருவர் கரத்தை மேலே உயர்த்தி இருக்கிறீர்களா-? ஆம், எனது சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அந்த இன்னுமொரு ஆத்துமா, அதை ஏன் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதில்லை. நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் பண்ணியும், ஆத்துமாக்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவது என்னவொரு அவமானமாக உள்ளது. இன்றிரவு அவரை ஏற்றுக் கொள்ளுங்கள், நீங்கள் அதைச் செய்வீர்களா-? வார்த்தையினாலே தண்ணீரால் கழுவுதல் மூலம், புத்துணர்ச்சியூட்டுவதன் மூலமாக (சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக.), உங்களுடைய ஆவியில் புத்துணர்ச்சியூட்டுவதினாலே, கிறிஸ்து மூலமாக தேவனோடு ஒப்புரவாகும்படி, நான் இப்பொழுது கிறிஸ்துவின் நாமத்திலே, கிறிஸ்துவின் ஸ்தானத்தில், உங்களை வற்புறுத்துகிறேன். நீங்கள் இப்பொழுது இனிமையாகவும், தாழ்மையாகவும் கிறிஸ்துவிடம் வந்து அவரை ஏற்றுக்கொள்வீர்களா-? சகோதரியே, அப்படியே உங்கள் இசையோடு கூட முன்னால் போங்கள்; நான் அப்படியே காத்துக் கொண்டிருக்கிறேன். ஒருக்கால் இன்னும் ஒருவர் இருக்கலாம். அந்நாளில், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் சற்று நீண்ட நேரம் காத்துக் கொண்டிருந்தீர், அப்போது ஏதோவொன்று என்னிடம் பேச, நான் எனது கரத்தை உயர்த்தினேன். சகோதரன் பிரன்ஹாமே, அது முழு காரியத்தையும் தீர்த்து வைத்தது. நான் இப்பொழுது இங்கே இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறலாம். அது எதைக் குறித்துக்காட்டும்-? அது எதைப் பொருள்படுத்தும்-? நீங்கள், ‘நான் அதை இதற்கு முன்பு கேட்டிருக்கிறேன்’ என்று சொல்லலாம். ஆனால், சகோதரனே, நீங்கள் ஒரு சமயத்தில் அதை கடைசி முறையாக கேட்கப் போகிறீர்கள். அதற்குப் பிறகு இனி நீங்கள் அதை ஒருபோதும் கேட்கப் போவதில்லை. நீங்கள் எந்த இடத்தை நோக்கிப் போகிறீர்களோ, அந்த விதமாகத்தான் நீங்கள் போகிறீர்கள். 36. எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, தங்கள் கரத்தை உயர்த்தினவர்களை நாங்கள் இப்பொழுது உம்மிடம் தருகிறோம், இவர்கள் உம்மிடம் வந்திருக்கிறார்கள், யாருமே இவர்களை உமது கரத்திலிருந்து பறித்துக்கொள்ள முடியாது. நீர் மகத்தான மேய்ப்பராய் இருக்கிறீர்; இவர்களை யாராலும், எந்தப் பிசாசினாலும், எந்த வல்லமையாலும், எதனாலுமே உமது கரத்திலிருந்து எப்போதுமே பறித்துக்கொள்ள முடியாது. ‘பிதாவானவர் எனக்குக் கொடுத்திருக்கிற யாவும் என்னிடத்தில் வரும். அவர்களில் யாரும் இழக்கப்பட்டுப் போவதில்லை, வேதவாக்கியங்கள் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் காப்பாற்றப்பட மாட்டான்.’ நீர் இன்னும் அழைத்துக் கொண்டிருக்கிறீர்; மனிதர்களும் பெண்களும் இன்னும் ஒப்புவித்துக் கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள். நீர் இவர்களை உமது இராஜ்யத்திற்குள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் இன்றிரவு ஜெபிக்கிறேன். இவர்கள் உடைய கரத்தைக் குலுக்கும்படியான உயரிய சிலாக்கியம் எனக்கு ஒரு போதும் கிடைக்காமல் இருக்கலாம். இந்தக் கூட்டம் ஆர்வமுள்ளதாய் உள்ளது, இது இக்கணத்தில் இருக்க, வியாதியுள்ள அநேக ஜனங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஓ, இந்தக் கனிகள் எனக்கு முன்பாக சம்பவித்துக் கொண்டிருப்பதை அறிகிற, கிறிஸ்துவே, நான் இவர்களை உமது கரத்தில் தருகிறேன். இதை அருளும், கர்த்தாவே. உமது வார்த்தையை பிரசங்கித்ததின் மூலமாக இவர்கள் விசுவாசித்து உம்மிடம் வந்திருக்கிறார்கள். கர்த்தாவே, வரவேண்டியிருந்தும் வராமல் இருக்கும் சிலர் இங்கே இருப்பார்களானால், அவர்கள் மேல் இரக்கமாயிரும், அவர்களும் கூட வருவார்களாக. அது நடந்து முடியும் வரையில், அவர்கள் சிறிதும் மகிழ்ச்சியற்ற ஒரு ஜீவியத்தை தான் ஜீவிப்பார்கள். இதை அருளும், கர்த்தாவே. எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும்; இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 37. வானம், பூமியினுடைய தேவனாகிய கர்த்தர் தாமே, உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. உங்கள் இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அருளும்படியாக, தேவன் இங்கேயிருக்கிறார் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? பரிசுத்த ஆவியானவர் இங்கே அவ்விதமாக உங்கள்மேல் அசைவாடிக் கொண்டிருந்த பிறகு எத்தனை பேர் மிக நன்றாக உணருகிறீர்கள்-? அவர் ஒவ்வொரு விசுவாசிக்கும், அவர்கள் எதற்காக மிகவும் ஏங்கி விசுவாசிக்கிறார்களோ அதை அவர்களுக்கு அருளுவார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், ‘ஆமென்’ என்று கூறுங்கள். வார்த்தையானது உங்களுக்கு ஏதோவொன்றைச் செய்கிறதில்லையா-? அது என்னவென்று உங்களுக்குத் தெரியுமா-? அது ஆகாரமாக உள்ளது; அது தேவனுடைய ஆடுகளுக்கான அவருடைய ஆகாரமாயிருக்கிறது. இந்த வேதாகமம் தான் தேவனுடைய ஆடுகளின் ஆகாரமாயுள்ளது. அது நல்லதல்லவா-? வேதாகமம் கூறுவது (என்னவென்றால்); தாவீது, ‘அது கன்மலையிலுள்ள தேனைப் போன்று ருசியாயுள்ளது’ என்று சொன்னான் என்று நம்புகிறேன். ஆமாம். தேவனுடைய வார்த்தையானது மிகவும் இனிமையானது. கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் மிகவும் நெருக்கமாகவும் மிகவும் நேசிக்கிறதாகவும் மிகவும் கனிவாகவும் இருக்கும் போது, நன்றாயிருந்த ஏதோவொன்றை அவர்கள் உண்மையாகவே ருசித்தது போன்று அது மெய்யாகவே உண்மையில் ஜனங்களுடைய உதடுகளை அப்படியே நக்கும் அளவுக்கு, கீழே இறங்கி வரும் வார்த்தையின் பேரிலே பழமை பாணியில் பரிசுத்தம் ஆக்கப்பட்ட பிரசங்கத்தை பண்ணுவதினால், அது ஜனங்களின் இருதயத்திற்குள் வருவதை நான் கண்டிருக்கிறேன். 38. என் அன்பு சகோதரனே, சகோதரியே, தேவனுடைய அன்புக்குரிய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, அவரின்றி பரலோகத்திற்கு போய்ச் சேர உங்களால் முயற்சி செய்ய தரமுடியாத அப்படிப்பட்ட ஒரு விதத்தில், இன்றிரவு உங்கள் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார் என்பதை நான் அறிவேன். அன்றொரு நாள் யாரோ ஒருவர், கொஞ்சம் கேள்வி கேட்கும் விதமாக, ‘சகோ.பிரன்ஹாமே, ஒரு மனிதன் உண்மையாகவே தேவனுடைய பிள்ளையாக இருந்தால், அவன் ஒரு தேவனுடைய பிள்ளை என்று அவனால் உண்மையாகவே அறிந்து கொள்ள இயலும் என்று நீர் விசுவாசிப்பதாக என்னிடம் சொல்ல வருகிறீரா-?’ என்று கேட்டார். நான், ‘முற்றிலுமாக. அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய ஆவியோடு கூட உங்கள் ஆவியும் சாட்சி கொடுக்கும் போது, நீங்கள் தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாய் இருக்கிறீர்கள். உங்களுடைய அனுபவமானது தேவனுடைய வேதாகமத்திற்குள் வந்து, நீங்கள் ஒவ்வொரு தேவையையும் சந்தித்து, தேவன் உங்களிடம் நிரூபித்துக்காட்டியிருக்கும்போது, உலகம் எல்லாம் ஒழிந்துபோய், நீங்கள் ஒரு புது சிருஷ்டியாகி விடுகிறீர்கள்; அப்பொழுது நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டு விட்டீர்கள்’ என்றேன். தேவனே அதைச் செய்து விட்டார். 39. இப்பொழுது, நாம் சிறிது நேரத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கப்போகிறோம். பொறுங்கள்... பில்லி, நீ செய்தாயா-? அவன் இன்றிரவு மறுபடியுமாக ஜெப அட்டைகளை விநியோகிக்கிறான். கர்த்தருக்குச் சித்தமானால், நாளை இரவிலோ, கர்த்தருக்குச் சித்தமானால், அல்லது நாளை இரவிலோ, அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவிலோ, ஒன்றில், அனைவரும் மேடைக்கு வந்து அப்படியே ஜெபிக்கப்படும் இடத்தில் (வைத்து), ஒரு (ஜெப) வரிசையைக் கொண்டிருக்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள்-? அதைப் போன்ற அந்த இரவுகளில் ஒன்றை கொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்களா-? அநேகமாக ஒருக்கால் நாளைக்கு நாம் அதைச் செய்யலாம். விநியோகிக்கும்படி, மிகுந்த பெரிய வேறொரு கட்டு ஜெப அட்டைகளுடன் நான் இந்தப் பையனை அனுப்புவேன், நாம் அநேகமாக அவர்களை வரிசையினூடாக கடந்து போகப் பண்ணலாம். வெறுமனே வேகமான வரிசைகளைப் போன்றல்ல, ஆனால் அவர்களை மேடைக்கு கொண்டு வாருங்கள். சமீபத்தில் தான் நான் இங்கே அதைச் செய்தேன், அப்போது கர்த்தர் செய்தது ஒரு அற்புதமாக இருந்தது. நீங்கள் அமெரிக்க ஜனங்கள் மேல் கரங்களை வைக்க வேண்டும் என்றே அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அப்படியே அதைச் செய்ய வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன்; எனக்குத் தெரிந்தது எல்லாம் அவ்வளவு தான். கரங்கள் உங்கள் மேல் வைக்கப்படாமலேயே அதை ஏற்றுக்கொள்ளும், ஒரு உயர்மட்டத்தில் உங்களை அதை விசுவாசிக்க வைக்க நான்-நான் முயன்றுகொண்டிருக்கிறேன்: நீங்கள் வெறுமனே அதை விசுவாசித்து, நடந்து செல்லுங்கள். ஆயினும், அங்கே ஒரு வேத வாக்கியம் உள்ளது. அந்த... யவீரு, அவன் ஒரு யூதனாக இருந்தான். அவன், ‘நீர் வந்து என்னுடைய சிறு குமாரத்தியின் மேல் உமது கைகளை வையும், அப்பொழுது அவள் சுகமடைவாள், அல்லது பிழைப்பாள்’ என்றான். அவன் ஒரு யூதனாக இருந்தான். அவள் மேல் கரங்களை வைக்க இயேசு அந்தப் பட்டணத்தை கடந்து போக வேண்டியிருந்தது, ஏனென்றால் அதைத் தான் அவன் விசுவாசித்தான். 40. ஆனால் புறஜாதியாகிய ரோமனோ, ‘போதகரே, நீர் என்னிடம் அதைச் செய்ய வேண்டியது இல்லை. நான் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்ட ஒரு மனிதனாயிருந்தும், நான் இந்த மனிதனைப் பார்த்து, ‘போ’ என்றால், அவன் போகிறான். இந்த ஒருவனைப் பார்த்து, ‘வா’ என்றால், அவன் வருகிறான். நீர் வெறுமனே வார்த்தையைப் பேசும்; அவ்வளவு தான். வெறுமனே வார்த்தையைப் பேசும், அப்பொழுது என்னுடைய ஊழியக்காரன் பிழைப்பான். நீர் என்னுடைய வீட்டிற்கு வர நான் பாத்திரனல்ல’ என்றான். இயேசு திரும்பி, அந்த யூதர்களைப் பார்த்து, ‘இஸ்ரவேலில் நான் அதைப்போன்ற விசுவாசத்தை ஒருக்காலும் கண்டதில்லை’ என்றார். அது சரியே. அதைத்தான் நான் ஜனங்களிடம் கொண்டுவர முயற்சிக்கிறேன். நீங்கள் அமெரிக்காவில் அதைப்போன்று அதிக விசுவாசத்தைக் காண்பதில்லை. சகோதரன் ஜுலியஸ் அவர்களே, நீங்கள் அதை ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் மற்றும் அதைப்போன்ற இடங்களிலும் காணலாம், ஆனால் அமெரிக்காவில் அதைக் காண்பதில்லை. வெறுமனே சும்மா... நீங்கள் அமெரிக்காவில் மிக அதிக வேதசாஸ்திரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் மிக அநேக ஆவிக்குரிய ஊக்கம் அளிக்கும் வஸ்துக்களை உடையவர்களாயிருக்கிறீர்கள். உங்களுக்கு அவசியமாயிருப்பது என்னவென்றால் வலியைப் போக்கும் ஒரு உண்மையான ஓப்பியம் தான். அவர் பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமாய் இருக்கிறார். ஓப்பியம் உங்களுக்கு எங்கே கிடைக்கிறது-? லீலி புஷ்பத்திலிருந்து. அந்த லீலி புஷ்பம் கல்வாரியில் பிழியப்பட்டது; உங்களுக்குத் தேவையான சகல ஓப்பியமும் அவரிடம் இருக்கிறது. அது சரியே. அவர் ஒவ்வொருவயையும் போக்குகிறார். 41. ஓப்பியம் வலியை நீக்கிவிட, துக்கத்தை அகற்றவே இருக்கிறது. இன்றைக்குள்ள போதை மருந்தைப்போன்று, நீங்கள் ஓப்பியத்தைக் கொண்டு ஒரு குடிகாரனாக ஆகலாம். ஆனால் அந்தக் கொஞ்சமான ஓப்பியத்தை அது தீரும் வரை உபயோகித்த உடனே, உங்களுக்கு தலைவலி வரும், நீங்கள் எப்பொழுதும் இருந்ததைக் காட்டிலும் மோசமாவீர்கள். ஆனால் நான் பேசிக் கொண்டிருக்கிற இந்த ஓப்பியமோ, கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வருவதாகும், அது அப்படியே தீர்ந்து போவதில்லை. அவருக்குள்... ‘என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனுண்டு. நீ யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்திருந்தாயானால், நீ இங்கே பானம் பண்ண வராதபடிக்கு நான் உனக்கு தண்ணீரைக் கொடுத்திருப்பேன், கிணறுகள் கணக்கான தண்ணீர் உன்னுடைய ஆத்துமாவில் பொங்கி வந்து கொண்டிருக்கும் என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.’ அவ்விதமான தண்ணீர் தான் நமக்கு அவசியமாயுள்ளது. இப்பொழுது, இன்றிரவில் நாம் ஜெப வரிசையை அழைக்கப்போகிறோம். 1 முதல் 100 வரையா-? 1 முதல் 100 வரை. ட என்றா சொன்னீர்கள்-? ட, சரி. பீனிக்ஸ்-ல் உள்ளதைப் போன்றே ஜெப அட்டை ட. எங்கேயோ இருக்கும் யாரோ ஒருவரை, எழுந்து நிற்கவைக்க துவங்குவோம். ஜெப அட்டை, நல்லது, அவர் 1-ல் துவங்குவாரானால், நாம் எண் 1-ல் துவங்கலாம், நாம் எண் 1-ல் ஆரம்பிக்கலாம். எண்... ஐ கொண்டு வாருங்கள். எண் 1 யாரிடம் உள்ளது-? பீனிக்ஸில் உள்ளதைப் போன்றே ஜெப அட்டை, ட எண் 1-? நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? வெளிப்புறமாக கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தினரில் என்னால் காண முடியவில்லை. சரி, சீமாட்டியே, சற்று நேரம் இங்கு வாருங்கள். 42. எண் 2, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? எண் 3, நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? எண் 4, உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? அதைக் கவனித்துப் பாருங்கள், ஒருக்கால் கரத்தை உயர்த்த முடியாத யாரோ ஒருவராயிருக்கலாம். கேட்க முடியாத யாரோ ஒருவராக இருக்கலாம். 1, 2, 3, 4, அது அவர்கள் தான் என்று நினைக்கிறேன். எண் 5-? சரி, சீமாட்டியே. எண் 6, உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா, எண் 6-? எண் 7, 8, 9, 10. சரி. இப்பொழுது, இவர்கள் முதலாவது மேலே வர விடுவோம். சரி. இவர்களுக்காக நான் ஜெபம் செய்வதற்கு முன்பாக அபிஷேகத்தை நான் உணரும் மட்டும் நான் அப்படியே காத்துக் கொண்டிருக்க முயன்று கொண்டிருந்தேன். உங்களுடைய கைக்குட்டைகள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன; அவர் - இவர்களுக்காக ஜெபிப்பதற்கு முன்பாக அபிஷேகம் வருவதை நான் அறிந்து கொள்ளும் மட்டும் நான் அப்படியே காத்துக் கொண்டிருந்தேன். பாருங்கள், இவை வியாதிப்பட்டுள்ள சிறு பிள்ளைகளை பிரதிநிதித்துவப் படுத்தலாம். என்னுடைய குழந்தை வியாதியாக இருந்தால் என்னவாகும்-? பாருங்கள், (அப்படியானால்) எனது குழந்தைக்காக செய்ய முடிந்த ஒவ்வொரு உத்தமத்தையும் நான் விரும்பியிருப்பேன். நீங்களும் கூட அதையே விரும்புகிறீர்கள். தேவனோ, அல்லது ஊழியக்காரரோ, அல்லது வேறு யாரேனும், எனது குழந்தைக்காகவும், எனது மனைவிக் காகவும், எனது அன்பார்ந்தவர்களுக்காகவும், எனது நண்பருக்காகவும் செய்ய முடிந்த ஒவ்வொரு சிறு காரியத்தையும் நான் விரும்புகிறேன். நீங்களும் கூட அதை விரும்புகிறீர்கள், இல்லையா-? எனவே அதைத்தான் நாங்கள் செய்ய விரும்புகிறோம், எங்களுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கும்படி மிக ஆழமான உத்தமத்தோடு இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம். 43. எத்தனை-? ஜெப அட்டை ட எண் 4 வெளியே உள்ளது. அது இன்னும் மேலே வரவில்லை என்று பில்லி சொன்னான். நீங்கள் உங்களுக்கு அருகில் இருப்பவர்களின் அட்டையைப் பார்ப்பீர்களா-? ஒருக்கால் யாரோ ஒருவர் அதை தவறவிட்டிருக்கலாம். தங்கள் அட்டையை காண முடியாமல் இருக்கும் ஒரு குருடான நபராக அது இருக்கலாம். அட்டையிருக்கும் எல்லாரும் அதைப் பாருங்கள், அல்லது யாரோ ஒருவருடைய அட்டை: எண் 4 தானா என்று பாருங்கள். அட்டையின் பின்னால், அது ஒரு சின்னஞ்சிறிய காரியமாக இருக்கிறது; அது... பெற்று இருக்கிறது. இங்கே அதன் மேல் என்னுடைய படம் இருக்கிறது. அதன் பின்னால் ஒரு ட என்று இருக்கும், அங்கே மேலே தான் அதில் ஒரு எண் இருக்கும். ஜனங்களை வரிசையில் நிற்க வைக்கும் நோக்கத்தில் தான் நாங்கள் அதைச் செய்கிறோம்; ஒரே காரணம் அது தான். நான் இவர்களை இங்கே மேலே கொண்டு வருவதற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் (மேலே கொண்டுவர) வேண்டுமென்பதில்லை. நீங்கள் அதைச் செய்ய வேண்டியதில்லை. சென்ற இரண்டு அல்லது மூன்று இரவுகள் எப்படியும் அவர்கள் அப்படியே அவர்களை எந்த இடத்திலாவது அழைக்கத்தான் செய்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும், அது முக்கியமில்லை. யாராவது தங்கள் மேல் கரத்தை வைக்க அவர்கள் விரும்புகிறார்கள் என்ற எண்ணம் மட்டுமே அது. உங்களுக்குப் புரிகிறதா-? ஒரே காரியம் அது மட்டுமே. அவ்வாறு இருக்க வேண்டியதில்லை. ஆனால் வெறுமனே கொஞ்சம் பேரை மேலே மேடைக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான், அதனால் அவர்கள்... என்று புரிந்து கொள்வார்களே. 44. சரி, 10 தானா-? இப்பொழுது அவர்கள் எல்லாரும் அங்கு வந்து விட்டார்களா-? எண் 4-ஐத் தவிர எல்லாரும். சரி, பீனிக்ஸில் உள்ளதைப் போன்று எண் ட-ல் 11, 12, 13, 14, 15. உங்களால் கூடுமானால், வந்து உங்கள் இடத்தை எடுத்துக்கொள்ள விரும்பினால், சரி. அவர்கள் - நீங்கள் வர விரும்பினால்... இப்பொழுது, நீங்கள், ‘சகோ.பிரன்ஹாமே, வரிசை சற்று நீளமாயுள்ளது; நீர் இதுவரை சென்றடையாமல் இருக்கலாம்’ என்று கூறலாம். நான் அதுவரை சென்றடையாமல் இருக்கலாம். அங்கே வெளியில் எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நான்... நீங்கள் இரவில் கவனிப்பீர்களானால், சகோதரன் மூர் அவர்கள் ஒரு பக்கத்திலும், சகோதரன் பிரவுன் அவர்கள் மறுபக்கத்திலும், பில்­ நின்று கவனித்துக் கொண்டும் இருக்கிறார்கள்; அவர்கள் என்னை கவனிக்கிறார்கள். நான் போதுமானதைப் பெற்றிருக்கும் போது, அவர்கள் என்னைக் கொண்டு செல்கிறார்கள். அது என்ன தாக்கத்தை உடையதாயிருக்கிறது என்பதை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா-? அன்றொரு இரவில் நான் தூக்கத்தை விட்டு விழித்து வெளியே சாலையில் போய்க் கொண்டிருந்தேன், நான் எப்போது அந்த இடத்தை விட்டு புறப்பட்டேன் என்பதை நான் அறியாமல் இருந்த பிறகும், வெளியே தெருவில் போய்க் கொண்டு, நான் மொத்தமாக தோல்வியில் இருந்தேன் என்று எனக்கு நானே படபடப்போடு இருந்து கொண்டிருந்தேன். கர்த்தர் ஏன் எப்பொழுதும் அதற்கு மேலும் தரித்திருக்க அனுமதிக்கிறார் என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை. நான் அழுது கொண்டும் மற்ற எல்லாமுமாக இருப்பதாக என்னையே காண்கிறேன். அங்கிருந்து வெளி வருவது என்பது, அது என்னவென்று நீங்கள் உணருவது இல்லை. நீங்கள்... என்று எனக்குத் தெரியும். பாருங்கள், எனக்கு அது புரியவில்லை. என்னால் அதற்கு விளக்கமளிக்க முடியாது. ஆனால் அது வேதாகமத்தில் உள்ளது என்பதை என்னால் காண்பிக்க முடியும். 45. எலியா தான் அபிஷேகத்தின் கீழிருந்து வானத்திலிருந்து அக்கினி வருமாறு வேண்டி, அதன் பிறகு வானத்திலிருந்து மழையும் வருமாறு வேண்டுதல் செய்து, 400 பூசாரிகளைக் கொன்று போட்டு, தான் செய்ததை நிறைவேற்றின போது, அவனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அதன் பிறகு அபிஷேகம் அவனை விட்டுப் போன போது, யேசபேல் என்ற ஒரு ஸ்திரீயிடமிருந்து தப்பி ஓடி, வனாந்தரத்தில் மறைந்து கொண்டான், 40 நாட்களாக இரவும் பகலும் அவன் எங்கே இருந்தான் என்பதை அறிந்து கொள்ளவில்லை. தேவன் அவனை நேரடியாக பின்னாலிருந்த ஒரு குகையில் கண்டு பிடித்தார். அது சரிதானா-? அது அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசியாக அவன் அங்கே நின்று கொண்டிருந்தபோதல்ல. இல்லை, ஐயா, அது அபிஷேகம் அவனை விட்டு போன போது தான். அது சரியே. தேவனுடைய ஊக்குவித்தலைக் (inspiration) கொண்டிருந்து, 4 நாட்கள் இரவும் பகலும் அல்லது 3 நாட்கள் இரவும் பகலுமாக ஒரு திமிங்கலத்தின் வயிற்றில் உயிரோடு வைக்கப்பட்டு, வெளியே வந்து ஏறத்தாழ 10 லட்சம் ஜனங்கள் இருந்த ஒரு பட்டணத்தைப் பார்த்து தீர்க்கதரிசனம் சொன்ன யோனாவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்; அவர்கள் மனந்திரும்பவும் கூட செய்தார்கள், அதனால் அவர்கள் மிருகங்களுக்கும் இரட்டு உடுத்தினார்களே. அதன் பிறகு அந்த மனிதன் அந்தக் குன்றின் மேல் ஏறிச்சென்றான், அபிஷேகம் அவனைவிட்டுப் போன போது, தன்னுடைய ஜீவனை எடுக்கும்படி அவன் தேவனிடம் ஜெபித்தான். அது சரியே. 46. ஓ, பெந்தெகோஸ்தேயினருக்கு என்ன அவசியமாயிருக்கிறது என்றால் ஒரு நல்ல வேத பாடம், நல்ல போதகம் தான்; அப்படியானால் நடந்து கொண்டிருக்கும் நிறையவைகள் அவசியமே இருந்திருக்காது. பாருங்கள்-? இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருந்தார். அவர் அளவே இல்லாமல் ஆவியைக் கொண்டிருந்தார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? அவருக்குள் ஒரு போதும் தேவனுடைய ஒரு பாகம் மாத்திரம் வாசம் செய்யவில்லை, ஆனால் தேவனுடைய எல்லாமே அவருடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தது. அவர் சரீரபிரகாரமாக தேவத்துவத்தின் பரிபூரணமாக இருந்தார். தேவனுடைய எல்லாமே கிறிஸ்துவுக்குள் ஊற்றப்பட்டது. தேவனாயிருந்த யாவுமே கிறிஸ்துவுக்குள் இருந்தது (All that God was was in Christ). கிறிஸ்துவாய் இருக்கிற யாவையும், அவர் சபையின் மேல் ஊற்றினார் (And all that Christ is, He poured out on the Church). ஆனால் நீங்களோ தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவிக்கிறீர்கள். பாருங்கள்-? காரியங்கள்... ‘என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், என்னை விசுவாசிக்காதீர்கள். பிதா என்னை அனுப்பினதுபோல (பிதாவானவர் எவ்வாறு அவரை அனுப்பினார்-? பிதாவானவர் அவரை அனுப்பி, அவரோடு சென்று அவருக்குள் இருந்தார்.), நானும் உங்களை அனுப்புகிறேன்.’ 47. தேவன் அவரை அனுப்பின அதே விதமாகவே அவர் சபையை அனுப்பிக் கொண்டு இருக்கிறார். போய், அவரை அனுப்பின தேவன் தான் அவரோடு கூட போனார். சபையை அனுப்புகிற கிறிஸ்து தான் சபைக்குள்ளும் பிரவேசிக்கிறார். சரியாக அதே கிரியைகள்... தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்-? தம்மைத் தாமே உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிதாவானவரை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை; பிதா ஒரு ஆவியாய் இருக்கிறார். ஆனால் பிதாவானவரின் ஒரே பேறானவரே அவரை வெளிப்படுத்தினார். அவர் இங்கே உள்ளே இருக்கிறார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து, அவருடைய மனப்பான்மை என்னவென்றும், அவர் உலகத்தைக்குறித்து என்ன நினைக்கிறார் என்றும், அவர் உலகத்தை எவ்வளவாய் நேசிக்கிறார் என்றும் உலகத்திற்கு தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். தமது சொந்த ஜீவனையே உலகத்திற்காக கொடுக்கும்படி அவர் உலகத்தை அவ்வளவாய் நேசித்தார். அவர் ஒரு மனிதனாக மரிக்கக் கூடிய ஒரே வழி என்னவென்றால், அவர் மனிதனாக ஆக வேண்டியிருந்தது தான். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்தார். கிறிஸ்து என்னவாக இருந்தாரோ அதை அவர் சரியாக சபைக்குள் வைத்து, தமது இரத்தத்தினாலே நம்மை மீட்டுக்கொண்டார். ‘நான் செய்கிற அதே கிரியைகளை, நீங்களும் கூட செய்வீர்கள்.’ ஒரு சமயம் ஓர் ஸ்திரீ அதை விசுவாசித்தாள். அவள் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டு, வெளியே மக்கள் திரளுக்குள் போய், அங்கே வெளியே நின்று கொண்டாள். இயேசு, ‘என்னைத் தொட்டது யார்-?’ என்று கேட்டார். அது சுவிசேஷம் என்று எத்தனை பேருக்குத் தெரியும்-? நிச்சயமாக, அது சுவிசேஷம் தான். 48. ஏன், பேதுரு அவரைக் கடிந்துகொண்டான். எல்லோருமே. ‘ஓ, ஹலோ, போதகரே. நீர் தானே அந்த மகத்தான தீர்க்கதரிசி-? அல்லது-அல்லது நான் உம்மைக் காண விரும்பினேன், நான் உம்முடைய கரத்தைக் குலுக்க முடியுமா-? நீர் என்னோடு மதிய உணவிற்கு வருவீரா-? உம்மை என்னுடைய வீட்டில் ஏற்றுக்கொள்ள விரும்பினேன். எனது மேய்ப்பர் உம்மை நம்ப மாட்டார் என்று நினைக்கிறேன், ஆனால் நான் உம்மை விசுவாசிக்கிறேன்.’ பாருங்கள்-? ஆனால் அவள் அவர்களுடைய கால்களுக்கு இடையே நழுவிச் சென்று, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு விட்டு, திரும்பி அங்கிருந்து வெளியே மிகத்துரிதமாக ஓடும் அளவுக்கு, ஒரு சிறு பெண்ணால் போதுமான அளவு நெருங்கி வரவும்கூட முடியாதிருந்தது. செய்ய வேண்டுமென்று அவள் விரும்பியது எல்லாம் அவ்வளவு தான். இயேசு நின்று, ‘என்னைத் தொட்டது யார்-?’ என்று கேட்டார். யாரோ அவரைத் தொட்டார் என்று அவருக்கு எப்படி தெரிந்தது-? பேதுரு சொன்னான், அவனும் கூட பூமியோடு பிணைக்கப்பட்டவனாகவே இருந்தான். அவன், ‘நல்லது, முழு மக்கள் திரளுமே உம்மைத் தொட்டுக் கொண்டிருக்கிறார்களே’ என்றான். அவன் அவரைக் கடிந்து கொண்டான். அவரோ, ‘நான் பலவீனமடைந்தேன்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டது’ என்றார். 49. வல்லமை என்பது என்ன-? பலம். தமக்குள் தேவனுடைய பரிபூரணத்தை உடைய தேவனுடைய குமாரனை ஒரு சிறிய ஸ்திரீ தொட்டதின் மூலமாக, ‘நான் பலவீனமடைந்தேன்; என்னுடைய பலம் என்னை விட்டு போய் விட்டது.’ நான் அதை இவ்விதமாக அளவீடு செய்கிறேன். பூமியின் மேலுள்ள ஒவ்வொரு துளி தண்ணீரும், ஏறக்குறைய பூமியில் ஐந்தில் நான்கு பாகம் தண்ணீரில் உள்ளது... பூமியின் மேலுள்ள ஒவ்வொரு துளி தண்ணீரும் கிறிஸ்துவுக்கு உள்ளிருந்த ஆவியை, கிறிஸ்துவுக்கு உள்ளிருந்த எல்லாவற்றையும் பிரதிநிதித்துவப்படுத்தி இருக்குமானால், இங்கேயுள்ள இந்தச் சிறிய வரமானது வெறுமனே அதிலுள்ள கரண்டியளவு மாத்திரம் தான். நீங்கள் அதை ஒரு போதும் தவற விட்டு விடமாட்டீர்கள். தேவன் என்னைக் கொண்டிருக்க வேண்டியதில்லை, ஆனால் நான் அவரைக் கொண்டு இருந்தாக வேண்டும். ஆனால் நான் வெறும் ஒரு சிறிய கரண்டி அளவு தான். ஆனால் இப்பொழுது, நான் அதிலுள்ள நல்லதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். முழு சமுத்திரத்திலும் இருக்கிற அதே இரசாயனங்கள் தான், அதே விதமான இரசாயனங்கள் தான் கரண்டி அளவிலும் உள்ளன, நிச்சயமாய் அதிகமாக அல்ல. எனவே கிறிஸ்து செய்த அதே கிரியைகளை ஊழியக்காரனும் கூட செய்கிறான், எனென்றால் கிறிஸ்துவின் ஜீவனானது ஊழியக்காரனுக்குள்ளும் இருக்கிறது. ‘நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடு வந்து உங்களுக்கு உள்ளும் இருப்பேன்.’ அது தான் உங்களை பலவீனமடையச் செய்கிறது. 50. இப்பொழுது, தமக்குள் தேவனுடைய பரிபூரணத்தை உடையவராய், கன்னியின் மூலம் பிறந்த தேவ குமாரனாகிய கிறிஸ்துவே ஒரு சிறிய ஸ்திரீ தம்மைத் தொட்டதின் நிமித்தமாக பலவீனமடைந்திருந்தால், கிருபையினாலே இரட்சிக்கப்பட்ட ஒரு பாவியாகிய என்னைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள். அவர் நின்று என்னைப் பிடித்திராமல் இருந்தால், அவ்விதம் ஒருவர் கடந்து செல்வதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது இருந்திருக்கும். மகத்தான தீர்க்கதரிசியாகிய தானியேல் ஒரு தரிசனத்தைக் கண்டு அநேக நாட்களாக தன்னுடைய தலையில் தொல்லையை உடையவனாயிருந்தான். இப்பொழுது நீங்கள் எல்லாரும் புரிந்து கொள்ள துவங்கிவிட்டீர்களா-? அது தான் பலவீனத்தை உண்டாக்குகிறது. ‘சகோதரன் பிரன்ஹாமே, இந்தத் தரிசனங்கள் என்ன செய்கின்றன-?’ அது நீங்கள் தான்; அது நானல்ல. தரிசனங்கள், தேவன்... இது தேவனுடைய ஒரு வரமாயிருக்கிறது; இது என்னுடையது அல்ல; இது தேவனுடைய வரம். 51. இன்று என்னுடைய மனைவி, "பில்லி, நீர் ஒருக்காலும் வீட்டில் தங்குவதில்லை. இதோ நமக்கு விவாகமாகி ஏறக்குறைய 15 வருடங்களாகிறது, உமது பிள்ளைகளுக்கு அநேகமாக உம்மைத் தெரியாது’ என்று சொன்னாள். நீங்கள் தொலைபேசியை எடுத்த உடனேயே, "சகோதரன் பிரன்ஹாமே, இங்கே வாரும். இங்கே வாரும். இங்கே வாரும்’ என்று ஒருக்கால் ஒரு நாளைக்கு 30, 40 அழைப்புகள். நல்லது, (அப்போது) நீங்கள் மிகவும் பரபரப்பாக ஆகிவிடுகிறீர்கள். நான், "ஆனால், தேனே, கவனி. என்னுடைய வாழ்க்கை என்னுடையதும் அல்ல, உன்னுடையதும் அல்ல. நான்... தேவன், பொது ஜனங்களுக்கான ஒரு வரமாக என்னைக் கொடுத்திருக்கிறார். நான் பொது ஜனங்களுக்கு உரியவன்’ என்றேன். இப்பொழுது, நீங்கள் அதனோடு செய்வது எதுவாக இருந்தாலும், அது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே இருக்கும். அது நானல்ல. நான் ஒரு மனிதன். ஆனால் இங்கே உள்ளே இருக்கும் ஆவியோ உங்களுக்காக தேவன் செய்யும் ஒரு பொது ஜன உதவியாக இருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யலாம். அதனோடு நீங்கள் செய்வது எதுவாக இருந்தாலும்; அது உங்களைப் பொறுத்தது. அது உயர்மட்டத்தில் வசீகரமாக இருக்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கலாம். அவ்வண்ணமாகவே யோவானும் வசீகரமாக இருந்திருப்பான் என்று நாம் எண்ணிக் கொண்டோம், ஆனால் அவன் அநேகமாக யோர்தானின் கரைகளில் தன்னுடைய முழங்கால்கள் வரைக்கும் சேற்றில் நின்றபடி பிரசங்கம் பண்ணிக் கொண்டிருந்தான். 52. அது என்னவொரு மகத்தான நேரம் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் உரைத்திருந்தார்கள், கிடைமட்ட வானவில் கீழே சரிந்துவர, ஓர் மகத்தான இராஜா ஒரு குதிரை மேல் சவாரிசெய்து இறங்கி வருவார் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதுவோ என்னவாக இருந்தது-? யோர்தானின் கரைகளில் நடந்து கீழே வந்து, அங்கே நின்று கொண்டிருந்த ஒரு மனிதன் மூலமாக ஞானஸ்நானம் பண்ணப்பட்ட எந்த விசேஷமான சமூக அந்தஸ்தும் இல்லாத ஒரு சிறு சாதாரண மனிதர், சரியாக உடை உடுத்தவும் கூட இல்லை, தன்னைச் சுற்றிலும் ஆட்டுத்தோல் துண்டை சுற்றி போர்த்தி இருந்தான். அந்நேரத்தில் தான் பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல உயர் ஸ்தலங்களும் தாழ்த்தப்படும் என்று வேதாகமம் கூறியிருக்கிறது. பர்வதங்கள் அதைக் கண்டபோது, அவை சிறு ஆட்டுக்கடாக்களைப் போன்று துள்ளி, சகல குன்றுகளும் கைகொட்டின. அது என்னவாக இருந்தது-? ஒரு பரிசுத்த உருளையர் என்றும், வெளியே கரையில் நின்று கொண்டு முறை தவறிப்பிறந்தவர் என்ற ஒரு பெயரோடு, ஞானஸ்நானம் பண்ணப்படும் படிக்கு இறங்கி வந்து கொண்டிருந்த ஒரு வாலிபருக்கு (Boy) ஞானஸ்நானம் கொடுத்தவன் என்று கருதப்பட்ட ஒரு பிரசங்கியார். அப்போது தான் அது சம்பவித்தது. உலகம் மகத்தானது என்று அழைப்பதை, தேவன் மதியீனமென்று அழைக்கிறார். உலகம் மதியீனமென்று அழைப்பதை, தேவன் மகத்தானது என்று அழைக்கிறார். பாருங்கள், அது உங்களுடைய சிந்தையானது எங்கே இருக்கிறது என்றும், நீங்கள் எதை நோக்கிப் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதையும் அது பொறுத்தது. இப்பொழுது, நாம் தேவனை நம்முடைய முழு இருதயங்களோடும், நம்முடைய முழு மனதோடும் விசுவாசிப்போம். இப்பொழுது, ஜெப வரிசை எல்லாம் ஆயத்தமாகி விட்டதா-? எண் 4 மற்றும் எண் 14 காணப்படவில்லை. சரி, நாம் நிறைய நேரத்தைக் கொடுக்கிறோம். எனவே இப்பொழுது, மிகவும் பயபக்தியாயிருந்து ஜெபம் பண்ணுங்கள். 53. எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே-? இப்பொழுது, நான்... தேவன் நிச்சயமாக பேச வேண்டிய நேரம் இதுவே. இயேசு தாமே பேசாவிட்டால், நான் சொன்ன எல்லாம் சரியாகவே இருக்காது. எல்லாரும் அதைப் புரிந்துகொள்ள முடிகிறதா, இப்பொழுது, இப்பொழுது இந்த வேதாகமம் சரியாக இருக்க வேண்டுமா அல்லது இது தவறாக இருக்க வேண்டுமா என்றுள்ள ஒரு நிலைக்குள்ளாக நான் இங்கே என்னைத்தானே வைத்துக்கொள்கிறேன். இது முத்திரை இடும் நேரமாக உள்ளது. இப்பொழுது, எனக்குத் தெரிந்த வரைக்கும், இங்கே நின்று கொண்டிருக்கும் இந்த ஸ்திரீயை என்னுடைய ஜீவியத்தில் நான் ஒருபோதும் கண்டதில்லை. நாம் அந்நியர்களாய் இருக்கிறோம், அப்படித் தானே-? நாம் அநேகமாக பல மைல்கள் விலகியும், பல வருடங்கள் நீங்கலாகவும் பிறந்திருக்கலாம், நாம் எப்பொழுதாவது சந்திப்பது இதுவே முதல் தடவை. இப்பொழுது, இது மறுபடியுமாக பரிசுத்த யோவான் 4-லினுடைய முற்றிலும் சரியான காட்சியாக இல்லையா, ஒரு மனிதனும், ஒரு ஸ்திரீயும்... இப்பொழுது, இந்தப் பெண்ணிற்கு சுகம் தேவைப்படுமானால் என்ன-? என்னால் இவளைச் சுகப்படுத்த முடியுமா-? இல்லை, ஐயா. சுகமளித்தல் சம்பந்தமாக இவளுக்காக நான் ஏதாவது ஒன்றைச் செய்ய முடியுமா-? இல்லை, ஐயா. செய்யக்கூடிய அனைத்தும்... 54. இப்பொழுது, இவளுக்கு ஒரு - கிடைத்திருந்தால், அவர்களால் முடிந்த, மருத்துவர் இவளுக்கு உதவி செய்ய முடிந்த, அல்லது இவளுக்கு ஏதாகிலும் ஒன்றைக் கொடுக்கக் கூடிய ஏதோ ஓன்றோ அல்லது மற்றொன்றோ இவளுக்கு கிடைத்திருக்குமானால்... இப்பொழுது, மருத்துவரால் இவளுக்கு உதவி செய்ய முடியாது, இல்லை, இல்லை. மருத்துவர்கள் சுகம் அளிப்பதில்லை. தேவன் தான் சுகமளிக்கிறார்; மருத்துவர்கள் வெறுமனே எலும்புகளைப் பொருத்தி, துண்டுகளையும், அடைப்புகளையும் அகற்றி விடுகிறார்கள், ஏதோவொன்று சீழ்பிடித்திருந்தால், அவர்கள் அதை வெளியே எடுத்து, அதைப் போன்ற ஏதோவொன்றைச் செய்கிறார்கள். அல்லது நான் அன்றொரு இரவு சொன்னதுபோல, கொஞ்சம், உங்களுக்குள் இருக்கும் கிருமிகளாகிய அந்த எலிகளுக்கு விஷம் வைக்க கொஞ்சம் எலி விஷத்தைத் தருகிறார்கள். ஆனால் அவரால் அந்த திசுக்களை திரும்ப உருவாக்க முடியாது. சிருஷ்டிப்பதைச் செய்ய தேவன் மாத்திரமே ஆற்றல் பெற்றிருக்கிறார். அவரால் ஒரு பக்கவாட்டை வெட்டி திறந்து ஒரு கட்டியை வெளியே எடுத்துவிட முடியும், ஆனால் அந்த பக்கவாட்டை சுகமளிக்கப் போவது யார்-? தேவன் அதை சுகமளிக்காவிட்டால், உங்கள் நிலை ஒரு போதும் நன்றாக முன்னேற்றமடையவே செய்யாது. அவரால் அறுத்து, அகற்றிவிட முடியும், ஆனால் முற்றிலுமாக சுகமளிக்க முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா-? இப்பொழுது, இவளுக்கு பண விஷயத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் தேவையிருக்குமானால் என்ன-? இவளுக்கு தேவையிருக்குமானால் - அது குடும்ப பிரச்சனையாக இருக்குமானால் என்ன-? அது ஏதோவொரு... இருக்குமானால் என்ன-? அது பாவமாக இருந்தால் என்ன-? இவளுக்கு தேவையாக இருப்பது எல்லாமே கிறிஸ்துவுக்குள் தான் இருக்கிறது. இப்பொழுது, இந்தப் பெண் இங்கே எதற்காக இருக்கிறாள் என்று கிறிஸ்துவானவர் எனக்கு வெளிப்படுத்து வாரானால், ஒவ்வொரு நபரும் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களா-? இந்தச் சிறு பெண் உங்களிடம் சொல்லுவாள்... 55. சத்தியம் பண்ணுவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை; வேதாகமம்... கூறுவதில்லை. அதற்காக நீங்கள் ஜனங்களுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால், ஏன், அப்படியே - அது அப்படியே அதுவாகத் தான் இருக்கிறது. "வானங்களின் பேரிலோ பூமியின் பேரிலோ சத்தியம் பண்ணாதிருங்கள்’ என்று கூறுகிறது. சத்தியம் பண்ணவே வேண்டாம். நான் அறிந்தபடி, இந்தப் பெண்ணை என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதில்லை. எனக்கு இவளைத் தெரியாது என்று இவளும் சொன்னாள். இவள் வெளியில் கேட்டுக் கொண்டு இருக்கும் இந்தக் கூட்டத்தில் எங்கோ அமர்ந்து என்னைக் கவனித்துக்கொண்டிருந்தாலன்றி, இவளுக்கும் என்னைத் தெரியாது. ஆனால் இவளைக் குறித்த எல்லாமே தேவனுக்குத் தெரியும். இந்தச் சிறு பெண் சரியாக இங்கேயிருக்க, பரிசுத்த ஆவியானவர் வந்து, தாம் சமாரியா கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீக்கு செய்த அதே காரியத்தை இந்தப் பெண்ணிற்கும் செய்து, இவளுடைய பிரச்சனைகள் எங்கே என்றும், இவள் எதற்காக இங்கே இருக்கிறாள் என்றும், இவளுக்கு என்ன தேவையிருக்கிறது என்றும் கண்டறிந்து, அதை இவளுக்கு வெளிப்படுத்துவாரானால்... அந்த சமாரிய ஸ்திரீ என்ன சொன்னாள் என்பது உங்களுக்குத் தெரியுமா-? "மேசியா வரும்போது, அவர் இவைகளைச் செய்வார் என்று நாங்கள் அறிந்து இருக்கிறோம்.’ அது ஒரு அடையாளமாக உள்ளது, நமது தேவன், அப்படியே ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள், புதுப்பிறப்படைந்த கிறிஸ்தவர்களாகிய நீங்கள் மரித்துப் போகாமல் இன்றிரவும் இங்கே நம்மோடு ஜீவனோடு இருக்கிறீர்கள். இப்பொழுது, ஜெப அட்டை இல்லாமல் தேவன் உங்களைச் சுகப்படுத்த விரும்புகிறவர்களாய் இந்தக் கட்டிடத்திற்குள்ளிருக்கும் அனைவரும், உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள். சரி. அது சற்று ஏறக்குறைய எல்லா இடங்களிலும் உள்ளது. இப்பொழுது, விசுவாசம் உள்ளவர்களாய் இருங்கள். 56. இப்பொழுது, பெண்மணியே, நான் அப்படியே உன்னிடம் பேச விரும்புகிறேன். அப்படியே... மாத்திரமே. அவ்விதமாக பிரசங்கம் பண்ணின பிறகு, ஒரு பீட அழைப்பை விடுப்பது... நான் அப்படியே ஒரு நிமிடம் உன்னிடம் பேச விரும்புகிறேன். நல்லது, நீ, "சகோ.பிரன்ஹாமே, நீர் எதற்காக என்னிடம் பேச விரும்புகிறீர்-?’ என்று கேட்கலாம். உன்னுடைய ஆவியைப் பிடிக்கவே. அப்படியே ... போன்று. இயேசு ஏன் கிணற்றண்டையில் இருந்த அந்த ஸ்திரீயிடம் பேச விரும்பினார்-? அவளுடைய ஆவியைப் பிடிக்க தான். "எனக்கு பானம் எடுத்துக்கொண்டுவா’ என்றார். "நீர் அதைக் கேட்பது வழக்கமில்லையே’ என்றாள். அவர்கள் நீண்ட நேரமாக தொடர்ந்து பேசிக்கொண்டே போனார்கள். இறுதியில் அவளுடைய தொல்லை எங்கேயிருந்தது என்பதைக் கண்டு பிடித்தார். அந்த ஸ்திரீ எப்பொழுதாவது அவருக்கு மறுமொழி கூறியிருப்பாள் என்று நான் நம்பவில்லை. நீங்கள் எனக்கு பதிலளிக்க வேண்டியதில்லை, ஆனால் அவளுடைய தொல்லையை தேவன் அவருக்கு வெளிப்படுத்தி இருந்தால், எப்படியும் அவர் அவளுடைய தொல்லையை அறிந்திருப்பார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? பெண்மணியே, என்னால் உனக்கு உதவி செய்ய முடிந்தும், நான் அதைச் செய்யாதிருந்தால், நான் ஒரு முரட்டுத்தனமாக இருப்பேன். ஆனால் நான்... என்னால் செய்ய முடிந்த ஒரே வழி என்னவென்றால், வார்த்தையைப் பிரசங்கம் பண்ணுவதோ அல்லது ஒரு தெய்வீக வரத்தின் மூலமாகத் தான். அது சரி தானா-? அப்படியானால் நீ அதை ஏற்றுக்கொள்வாய். நீ உன் முதுகிலுள்ள ஒரு தொல்லையின் நிமித்தமாகவே இங்கே இருக்கிறாய். அந்த தொல்லையானது ஒரு-ஒரு முறிவாக உள்ளது; உன்னுடைய முதுகிலுள்ள ஒரு முறிந்து போன குருத்தெலும்பாக அது உள்ளது. அது உண்மை. இப்பொழுது, நீ விசுவாசிக்கிறாயா-? இந்தப் பெண் தீர்ப்பளிப்பவளாக இருக்கிறாள். பாருங்கள்-? 57. இப்பொழுது, என்ன நடக்க வேண்டுமென்றால், முழு கூட்டத்தாரும், "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மிடத்தில் விசுவாசம் வைக்கிறேன். நீர் ஜீவனுள்ளவராயிருக்கிறீர். நீர் அதைச் செய்வீர் என்று உமது வார்த்தை கூறுகிறது. நாங்கள் கடைசி நாட்களில், ஏறக்குறைய நீர் வரும் நேரமாக, ‘உங்கள் தலையை மேலே உயர்த்துங்கள்’ என்று நீர் சொல்லி இருக்கும் அணுயுகத்தில் (atomic age) வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ‘அந்நேரத்தில் தான் இவைகள் சம்பவிக்கும். இதோ உமது வார்த்தையின் மூலமாக நான் அதைக் காண்கிறேன். நீர் இங்கே இருக்கிறீர் என்று நான் இப்பொழுது விசுவாசிக்கிறேன். நான் உம்மை எனது சுகமளிப்பவராக ஏற்றுக்கொள்கிறேன். அது அதைத் தீர்த்துவைக்கிறது’’ என்று சொல்ல வேண்டும். அது அதைச் செய்ய வேண்டும். தேவன் மோசேயிடம், ‘போய் இந்த அடையாளத்தைச் செய். அவர்கள் உன்னை விசுவாசிப்பார்கள்’ என்றார். அவன் அந்த அடையாளத்தைச் செய்தான், அவர்களும் அவனை விசுவாசித்து, நெடுக அணிவகுத்துச் சென்றார்கள். ஆனால் நமது மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசுவால் வந்து அடையாளத்தைச் செய்ய முடிந்தும், புறஜாதிகளாகிய நாமோ தடங்கல் செய்து, ‘இப்பொழுது, அது அவர் தானா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை’ என்று கூறுகிறோம். ஆகையால் தான் நாம் ஆசீர்வாதத்தை தவறவிடுகிறோம். இப்பொழுது, இங்கே, இந்த ஸ்திரீயிடம் பேசிக்கொண்டிருப்பதைப் போன்று... இப்பொழுது, நான் இவளிடம் என்ன சொன்னேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் உங்களிடம் சொல்ல முடியவில்லை. ஆனால் சற்று நேரத்தில் என்னால் கண்டு பிடிக்க முடியும். அங்கு மேலே எனது ஒலிநாடா கலைஞர் (tape artist) இருக்கிறார். அவர்களிடம் அது இருக்கிறது, வாய்க்குள் பேசின (முணுமுணுத்த - மொழிபெயர்ப்பாளர்) ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள். பாருங்கள்-? 58. ஆனால் இப்பொழுது, அப்படியே உட்கார்ந்து சற்று நேரம் இந்தப் பெண்ணிடம் பேசுவது என்பது, நான் அப்படியே-அப்படியே ஒருக்கால்... அது - அது உன்னை நலமாக உணரச் செய்யாதா. அவர் வேறு எதுவும் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் வேறு எதுவும் சொல்லுவாரானால், அவர் (அதைச்) செய்வாரானால், அது உன்னுடைய விசுவாசத்தை அதிகரிக்குமா-? பெண்மணியே, அது உனக்கு (அதைச்) செய்யுமா-? அவர்... சரி, அது உங்களுடைய விசுவாசத்தை அதிகரிக்கும் என்று எத்தனை பேர் சொல்லுகிறீர்கள், நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும், அதனால் நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பீர்கள். இப்பொழுது, பெண்மணியே, வெறும் - ஒன்றிற்காக மட்டும் உன்னை உபயோகிக்கிறோம். கர்த்தர் தாமே அதை அருள வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாக உள்ளது. ஆனால் நீ இவ்விதமாக சற்றே மீண்டும் நோக்கி பரிசுத்த ஆவியானவர் தாம் செய்வார் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினதைச் செய்வாரா என்று பார்க்க விரும்புகிறேன். அவர் அதைச் செய்வார், அதாவது, அவர் எனக்கு அனுமதி கொடுப்பாரானால். இது ஒரு வரமாக இருக்கிறது. நானே இந்த வரத்தை இயக்குவது கிடையாது; இந்த வரம் தான் என்னை இயக்குகிறது. அதைச் செய்து கொண்டிருக்கிற ஒருவர் நீங்கள் தான். உங்களுக்கு விசுவாசம் இருக்குமானால், அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தைத் தொட்டது போல, அது உங்கள் விசுவாசமாக இருக்கிறது. இப்பொழுது, கேட்டுக்கொண்டிருக்கும் கூட்டத்தார் இன்னுமாக நான் பேசுவதைக் கேட்கிறார்கள் என்றால், இந்த ஸ்திரீ, ஆமாம், அது இவளுடைய முதுகில் தான் உள்ளது. அது இவளுடைய முதுகில் உள்ள ஒரு கோளாறு; நான் அதை மறுபடியும் காண்கிறேன். அது ஒரு-ஒரு முறிந்து போன குருத்தெலும்பு; முதுகிலுள்ள ஒரு குருத்தெலும்பு தான் முறிந்து போய் உள்ளது. உன்னோடு கூட வேறு யாரோ ஒருவரும் இருக்கிறார், அந்தப் பெண் நெடுங்காலமாக நரம்பு சம்பந்தமான கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அது சரியே. அவள் இந்த வீட்டில் தான் வசிக்கிறாள், நீ வசிக்கும் அதே இடத்தில். அவளுடைய பெயர் பிட்வெல். அது சரியே. 1315 பியஸ் போன்றதில் வசிக்கிறாய் (And you live like 1315 Pierce). அது சரியே. உன்னுடைய பெயர் எட்னா ஆண்டர்சன். அது சரியே. நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா-? ஓ, கிருபையுள்ள பரலோக தேவனே, எங்கள் மேலும், உம்முடைய பரிதாபமான பிரஜைகள் மேலும் இரக்கமாயிருந்து, இந்தப் பெண்ணிற்கு என்ன தேவையிருந்தாலும், இவளை ஆசீர்வதித்தருளும். கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 59. எப்படியிருக்கிறீர்கள்-? நான் உங்களுக்கு ஒரு அந்நியனாயிருக்கிறேன். நீங்கள் ஒரு சிவப்பு இந்தியர் என்று நினைக்கிறேன். நல்லது, உங்களுடைய தேசிய அந்தஸ்திற்காக நான் பெரும் மரியாதையை வைத்திருக்கிறேன். எப்படியும், நீங்கள் தான் உண்மையான அமெரிக்கர். தேவன் உங்களுக்கு இத்தேசத்தைக் கொடுத்தார். இப்பொழுது, நான் மில்லியன் கணக்கானோரில் (1 மில்லியன் : 10 லட்சம் - மொழிபெயர்ப்பாளர்) வெறுமனே ஒருவன் தான், ஆனால் நீங்கள் இதிலிருந்து அநியாயமாக நடத்தப்பட்டீர்கள் என்று உணரலாம், நானும் கூட அவ்வாறு உணர்கிறேன். தேவன் உங்களுக்கு தேசத்தைக் கொடுத்தார்; வெள்ளையனோ வந்து அதை உங்களிடமிருந்து எடுத்துக் கொண்டான். ஆனால் உங்களை மோசமாக நடத்தாத ஒருவரை எனக்குத் தெரியும்; அது தான் கர்த்தராகிய இயேசு. நீங்கள் மட்டுமீறிய நரம்பு கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு மருத்துவரிடம் போயிருக்கிறீர்கள். உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று அந்த மருத்துவர் உங்களிடம் சொன்னார், அது சிறுநீரகக் கோளாறுக்கான அறுவை சிகிச்சை; அது உடலின் பின்புறத்தில். அவர்கள் அகற்ற விரும்புவது உங்கள் இடது சிறுநீரகத்தை. ஓ பரலோக தேவனே, இந்தப் பெண்மணியின் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பி, இவர்களை ஆசீர்வதித்தருளும்; இயேசுவின் நாமத்தின் மூலம் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதித்து, நீங்கள் வேண்டிக்கொள்வதை உங்களுக்குக் கொடுப்பாராக. இப்பொழுது, கர்த்தராகிய இயேசு சகலத்தையும் அறிந்திருக்கிறார், இல்லையா-? அவருக்கு உங்களையும் என்னையும் தெரியும். நீங்கள் எற்காக இங்கே இருக்கிறீர்கள் என்பது அவருக்குத் தெரியும். நீங்கள் சுகமடைவீர்கள் என்று உங்கள் கணவரும் கூட நினைக்கிறார், இல்லையா-? ஒவ்வொரு பிரசங்கியும் தன்னுடைய முழு இருதயத்தோடும் வார்த்தையை விசுவாசிக்க வேண்டும். ஆனால் நீங்களும் கூட நரம்புக்கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதன் பிறகு உங்கள் நெஞ்சிலும் உங்களுக்கு வலிகள் இருக்கிறது. அது சரியே. திரும்ப பலவீனமாகி போவதையும், அங்கே ஒரு மருத்துவரைக் குறித்த ஏதோவொன்று இருப்பதையும், அது பித்தப்பையில் இருப்பதையும் நான் காண்கிறேன். அது அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பித்தப்பை கற்கள் வெளியே எடுக்கப்பட வேண்டுமென்று அவர் எச்சரித்து சொல்லி இருக்கிறார். அது குறைந்தபட்சமாக 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்போ அல்லது அதற்கும் அதிகமான காலமாக இருந்து வருகிறது. அது சரியே, 3-வருடம் 9 மாதங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இங்கே வாருங்கள். ஓ ஸ்தோத்தரிக்கப்பட்ட இயேசுவே, நீதிபரராகிய தேவகுமாரனே, இங்கே நின்று காத்துக் கொண்டு, உம்முடைய சுகமளிக்கும் வல்லமைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த அன்பான நபரை சுகப்படுத்தியருளும். நான் இவர்களுடைய சுகத்திற்காக இவர்களை இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். சீமாட்டியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 60. உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... இப்பொழுது, நீங்கள் அப்படியே மிகவும் கனிவாக இருப்பீர்களானால் (பாருங்கள்-?), உங்களால் உதவி செய்யக் கூடுமானால், அப்படியே அங்குமிங்கும் போகாதீர்கள். சற்று முன்பு இங்கே பின்னால் யாரோ ஒருவர் சுகமடைந்தார். நான் அதைப் புரிந்துகொள்ளவில்லை, ஏனென்றால் அப்போது யாரோ ஒருவர் நகர்ந்து சென்றார். நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, அதைக்குறித்து என்ன-? நீர் சொன்னீர்... நீர் சற்று முன்பு வேதாகமத்தைத் தான் பிரசங்கம் பண்ணினீர் என்று நினைத்தேன்’ என்று சொல்லலாம். அது வேதாகமம் தான். யவீருவின் குமாரத்தி குணமடைந்த ஒரு அறைக்குள் இயேசு சென்ற போது, அவர், ‘இவள் வெறுமனே நித்திரையாய் இருக்கிறாள்’ என்றார். அவர்களோ, ‘அவள் மரித்துவிட்டாள் என்று எங்களுக்குத் தெரியும்’ என்றனர். அவர், அவர்கள் ஒவ்வொருவரையும் வீட்டைவிட்டு வெளியேற்றினார். ஒருமுறை அவர் ஒரு மனிதனை சுகமாக்கும்படியாக அவனை மக்கள் கூட்டத்தை விட்டு வெளியே வழி நடத்தி, அவனை அந்தப் பட்டணத்திற்கு வெளியே அழைத்துச் சென்றார். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... சரியாக அதோ அந்த சீமாட்டியோடு உட்கார்ந்து கொண்டிருப்பவ(ரே) அப்படியே விசுவாசியுங்கள். நான் உறுதியாக நம்பவில்லை. நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு உதவி செய்யவே கர்த்தராகிய இயேசு என்னை இங்கே அனுப்பியிருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், தேவன் உங்களுக்காக அதைச் செய்வார். என்னால் உங்களைச் சுகப்படுத்த முடியாது, உங்களுக்கு அது தெரியும். ஏனென்றால் சுகமளிக்க எனக்கு எந்த வல்லமையும் கிடையாது. ஆனால் சுகமளிக்கும்படி வல்லமையுடைய ஒருவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சரி. உங்களுக்கு என்ன தவறு நேர்ந்துள்ளது என்பதை தேவன் என்னிடம் விளக்கிச்சொல்லுவாரானால், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா-? அது உங்களுடைய பக்கவாட்டில் உள்ளது. அது உம்முடைய வலது பக்கத்திலுள்ள ஒரு சதை வளர்ச்சி. அது சரியே. அது சரியல்லவா-? இப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? உங்களுக்கு ஏதோவொரு வகை ஆசீர்வாதம் உண்டாயிருந்தது, இல்லையா-? அது என்னவென்றால், வியாதிப்பட்டிருந்த உங்கள் கணவர் சுகம் அடைந்து இருக்கிறார். அது சரியே. அது ஒரு சர்க்கரை நோய். அது சரியல்லவா-?. அது முற்றிலும் சரியே. இப்பொழுது, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால் இங்கு வாருங்கள். பரலோகப் பிதாவே, இந்தப் பெண்மணியின் மேல் நீர் இரக்கமாயிருந்து உமது ஆவியானவர் தாமே இவர்கள் மேல் அசைவாடி இவர்களுடைய இருதயத்தின் வாஞ்சையை இவர்களுக்கு அருளுவீராக, நான் பலவீனமாகவும், ஆனால் தாழ்மையாகவும், விசுவாசத்தோடும், இந்த ஆசீர்வாதத்தை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சீமாட்டியே. 61. ‘நீங்கள் விசுவாசிக்கக் முடியுமானால், யாவும் கூடும்.’ விசுவாசமுள்ளவர்களாயிருங்கள், சந்தேகப்படாதீர்கள். சற்று முன்பு இங்கு மேலே இருந்த சீமாட்டி நீங்கள் தானா-? நீங்கள் இருந்தீர்கள் - உங்களுடைய பக்கவாட்டில் ஏதோ தவறு இருந்தது, இல்லையா-? சரியாக அங்கே அந்த மனிதருக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும், அந்த சீமாட்டிக்கும் அவ்வாறு தான் உள்ளது, அங்கே என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் இரண்டாவது சீமாட்டி, சரியாக அங்கு பின்னால் இருப்பவர், உங்களுடைய பக்கவாட்டிலும் ஏதோ தவறு நேர்ந்துள்ளது, ஆமாம், சரியாக இங்கேயிருக்கும் சீமாட்டி. வட்டமாக காணப்படும் சிறு தொப்பியை அணிந்திருப்பவர்களே, அது சரியல்லவா-? அது சரியே. இப்பொழுது நீங்கள் இருவருமே சுகமடைந்துவிட்டீர்கள். ஆமென். சற்று நேரத்திற்கு முன்பு, அது நீங்கள் தான், சீமாட்டியே. நல்லது, அது என்ன, இங்கே இந்த வரிசையிலும் அந்த அதே காரியம் இவ்விதமாக கூப்பிட்டுக்கொண்டிருந்தது மற்றும் எனக்குப் புரிந்தது - அது எந்த வழியில் வந்து கொண்டிருந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது இருந்தது. பாருங்கள்-? ஓ, அவர் நல்லவர் அல்லவா-? அவர் மிகவும் அற்புதமானவர். ‘நீங்கள் விசுவாசிக்க முடிந்தால், யாவும் கூடும்.’ ஆனால் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதைப் பொறுத்தது. 62. எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே-? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா-? துக்கம் நிறைந்தவர்களாயிருக்கிறீர்கள், இல்லையா-? நீங்கள் மிகவும் பதற்றத்தோடு, சரீர பிரகாரமாகவும் மனரீதியாகவும் நிலைகுலைந்து போயிருக்கிறீர்கள். நீங்கள் இப்பொழுது தான் யாரோ ஒருவரை இழந்தீர்கள்: அது உங்கள் கணவர். அது சரியே. கவலைப்படாதீர்கள்; தேவன் உங்களோடு இருக்கிறார். அவர் உங்களுக்கு ஒரு ஒரு ஆதரிப்பவராக இருப்பாரென்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். பதற்ற மடையாதீர்கள். அன்பு சகோதரியே, அவர் எல்லாவற்றையும் தமது கரத்தில் பிடித்திருக்கிறார். அவர் உங்களை நேசிக்கிறார், என்றும் அவர் உங்களை ஆசீர்வதிப்பார் என்றும் நான் நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். நாம் ஜெபம் செய்வோம். எங்கள் அன்புள்ள பரலோகப் பிதாவே, இங்கே நின்று கொண்டிருக்கும் இந்தச் சிறு பெண்மணியை நான் உமது அன்பிற்குரிய குமாரனாகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கிறேன். நான் இவர்களின் சுகத்திற்காக வேண்டிக்கொள்கிறேன். ஆமென். பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசத்தை மட்டும் கொண்டிருங்கள்; சந்தேகப்படாதீர்கள். இருள், தேவனால் புற்றுநோய்களைச் சுகப்படுத்தவும், அவர்களைக் குணப்படுத்தவும் முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சற்று பொறுங்கள், சீமாட்டியே. அதோ அது இருக்கிறது. நீலநிற உடையை (அணிந்துள்ளவர்களே - மொழிபெயர்ப்பாளர்.), தேவன் புற்று நோய்களைச் சுகப்படுத்துகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? சாத்தான், தான் அதனோடு கண்டு பிடிக்கப்படாமலே (தப்பித்து – மொழி பெயர்ப்பாளர்.) போய் விடலாம் என்று நினைத்தான், ஆனால் அவன் அந்த முயற்சியில் தோல்வி அடைந்து விட்டான். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? சீமாட்டியே, நீங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்களா-? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். சரி, உங்களுக்கு அது உண்டாகும், இப்பொழுது நீங்கள் இருவருமே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் புறப்பட்டுச் சென்று குணமடையுங்கள். தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால்... 63. உயர் இரத்த அழுத்தம் உடையவராய், அங்கே அந்த வரிசையின் இறுதியில், சரியாக அங்கே பின்னால் அமர்ந்து கொண்டிருக்கும், ஐயா, கர்த்தராகிய இயேசு உங்களைச் சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அப்போது அந்த சீமாட்டியோடு அப்படியே வரிசையில் இருக்க நேரிட்டது; அது போய்விட்டது என்று நினைத்தேன், ஆனால் அது சரியாக உங்களிடம் திரும்பி வந்துள்ளது. நீரும் கூட அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறீர், இல்லையா-? அது சரியே. சரி, நீர் உம்முடைய முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீரானால், நீர் வேண்டிக் கொள்வதை, நீர் கொண்டிருக்க முடியும். கர்த்தர் தாமே அதை உமக்கு அருளுவாராக. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வல்லமையினாலே சரியாக இப்பொழுதே நீர் சுகமடைந்து விட்டீர் என்று விசுவாசிக்கிறீரா-? ஓ தேவனே, நான் இம்மனிதர் மேல் கரங்களை வைத்து இவருடைய சுகத்திற்காக வேண்டிக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவர் தாமே சுகமடைவாராக. ஆமென். எப்படியிருக்கிறீர்கள், சீமாட்டியே-? அந்த ஆஸ்துமா (நோயை – மொழி பெயர்ப்பாளர்.) தேவன் உங்களை விட்டு போகச் செய்து, நீங்கள் சரியாகி, அந்த இருமலை நிறுத்தி விடுவார் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஓ அன்பு இயேசுவே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்தப் பரிதாபமான சிறு பெண்ணின் சுகத்திற்காக இவளை ஆசீர்வதிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் இது அருளப்படுவதாக. ஆமென். சகோதரியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அவருடைய ஆசீர்வாதங்கள் தாமே உன்மேல் இருப்பதாக. உங்களால் அதை விசுவாசிக்கக் கூடுமானால், தேவன் புற்று நோயையும், எதையுமே சுகமாக்குகிறார், அது அவருக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டாக்குவதில்லை. அவர் உங்களை சுகப்படுத்துவார் என்று நீங்கள் விசுவாசிப்பீர்களா-? ஓ இயேசுவே, ஜீவனுள்ள தேவனுடைய குமாரனே, சாத்தான் இவளுடைய ஜீவனை எடுக்க முடிவு செய்துள்ள இந்தப் பரிதாபமான சிறு பெண்ணை ஆசீர்வதியும். நீர் இவளை விடுவித்து, இந்த சத்துருவை வன்மையாக கண்டிக்க வேண்டுமென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென். பெண்மணியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. போய், விசுவாசமுள்ளவளாயிரு. 64. இருதயத்தில் தான் தேவன் வாசம் செய்கிறார். அவர் ஜீவிக்கிற இடத்தை அவரால் சுகப்படுத்த முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா-? அவர் உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ஓ நித்திய தேவனே, நான் கிறிஸ்துவின் நாமத்தில் ஆசீர்வதிக்கும் இம்மனிதர் மேல் உமது ஆசீர்வாதங்களை அனுப்பி அருளும். தேவனுடைய மகிமைக்காக இவர் சுகமடைவாராக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, சகோதரனே. போய், இப்பொழுது உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசித்துக் கொண்டிருங்கள். இங்கே வெளியே உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? விசுவாசம் உடையவர்களாயிருங்கள். தேவன் கீல்வாத நோயையும் கூட சுகமாக்குகிறார். நீர் அந்த வரிசைக்குப் பின்னால் அமர்ந்து உமது கீல்வாத நோய்க்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறீர். அது சரியே. தூதனானவர் அந்தவிதமாக போவதை நான் கண்டிருக்காவிட்டால், நான் ஒருபோதும் அதைப் பார்த்திருக்க மாட்டேன். இப்பொழுது, ஐயா, நீர் வேண்டிக்கொள்வதை உம்மால் கொண்டிருக்க முடியும். உம்முடைய விசுவாசம் உம்மை சுகமாக்கிவிட்டது. தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவிசுவாசி விசுவாசிக்கவும் ஏற்றுக் கொள்ளவும் அவனுக்கு என்னவொரு சவால். சைனஸ் பிரச்சனை உடையவளாய், சரியாக அங்கே வெளியே, கண்ணாடிகள் அணிந்து, ஒரு விதத்தில் ஒல்லியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் சீமாட்டியே. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகமாக்குகிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் வேண்டிக் கொள்வதை உங்களால் கொண்டிருக்க முடியும். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 65. இப்பொழுது, உங்களுக்கு அடுத்திருக்கும் சீமாட்டி. அவர்கள் தங்கள் தலையை தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்; அவர்கள் ஏதோவொன்றிற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுடைய சிறு பேரனைக் குறித்து. அது சரியே. நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அவ்வாறு விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் உடைய சிறு பேரன் நரம்புக்கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான், மிகவும் பதட்டமாயிருக்கிறான், அவனால் பள்ளிக்குக் கூட போக முடியவில்லை. அது சரியே. ஆனால் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்களானால், நீங்கள் வேண்டிக் கொள்வதைப் பெற்றுக் கொண்டு, நீங்கள் அவனைக் காணும் போது, அவனை வித்தியாசமாக காண்பீர்கள். கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. இங்கே இருக்கும் இந்த கைக் குட்டைகளுக்காக ஜெபம் செய்வோம். 66. ஓ தேவ குமாரனாகிய இயேசுவே, தேவையிலுள்ள இவர்களிடம் இரக்கமாயிருந்து, இந்த கைக்குட்டைகள் பிரதிநிதித்துவப்படுத்துகிற இவர்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தி அருளும். இதை அருளும், கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில். இங்கேயிருக்கும் இந்த பெண்ணுக்கு, நீர் இவளைச் சுகப்படுத்தி இவளுடைய ஒவ்வொரு இம்மியையும் குணமாக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். இவள் தாமே தேவனுடைய சமாதானத்துக்குள்ளே போய் சுகமடைவாளாக. இங்கே உள்ளேயிருக்கும் எத்தனை பேர் சரியாக இப்பொழுதே விசுவாசிக்கிறீர்கள்-? எனது மகன், அல்லது அவர்களில் ஒருவர் என்னுடைய கோட்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிவேன், அதனால் நான்-நான் கட்டாயம் இங்கிருந்து போக வேண்டும் என்பது அது சற்றேறக்குறைய நிச்சயம் கடைசியாக இருந்தாக வேண்டும். இப்பொழுது, சற்று நேரம் மிகவும் பயபக்தியாயிருங்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு, ஆழ்ந்த உத்தமத்துடன், தேவனுடைய மகத்தான மந்தையின் மேய்ப்பராகிய, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து அந்த அவிசுவாசத்தையும் அந்தப் பழைய அலட்சியப் போக்குகள் யாவற்றையும்... அகற்றிப் போடும்படிக்கு இங்கேயிருந்து தமது வழியை உங்களுடைய இருதயத்திற்குள்ளாக பிணைத்துக் கொள்ள அவரால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு கடினமாக முயன்று கொண்டிருக்கிறார். பாவம் என்பது என்ன-? பாவம் என்பது என்னவாக இருக்கிறது-? அவிசுவாசம். ஒரு மனிதனோ அல்லது ஒரு பெண்ணோ, பையனோ அல்லது சிறு பெண்ணோ, இவ்விதமான ஒரு கூட்டத்தில் அமர்ந்து அவிசுவாசித்துக் கொண்டே வெளியே போவார்களானால், உங்களுக்கு இனி எந்த நம்பிக்கையும் இல்லை என்று நான்-நான் விசுவாசிக்கிறேன். சரியாக இப்பொழுதே ஏன் விசுவாசிக்கவில்லை-? நீங்கள் அதைச் செய்வீர்களா-? அவரை நோக்கி உங்கள் கரங்களை உயர்த்துங்கள். பெண்மணியே, இங்கே வா. கிறிஸ்துவின் நாமத்தில், இந்தப் பெண்ணைச் சுகப்படுத்தி, இவளை குணமாக்கும், கர்த்தாவே. 67. பரலோகப் பிதாவே, கேட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தாரிடம் நீர் இரக்கமாய் இருக்கும்படி ஜெபிக்கிறேன், பரிசுத்த ஆவியானவர்... எவ்வாறேனும், தேவனே, நீர் எவ்வாறு அதைச் செய்வீர் என்று எனக்குத் தெரியாது, ஆனால் நீர் அதைச் செய்ய வேண்டுமென்று நான் வெறுமனே வேண்டுதல் செய்து கொண்டிருக்கிறேன்: இருளின் வல்லமையை உடைத்துப் போடும்; அந்த அவிசுவாசத்தின் வல்லமையை உடைத்துப்போடும். இவர்கள் உட்கார்ந்து கொண்டிருக்கும் இடத்திலேயே ஒவ்வொரு நபரையும் அசைக்கும் படியாக, கேட்டுக் கொண்டிருக்கும் இந்த கூட்டத்தினருக்குள் உமது ஆவியை ஊற்றியருளும். தேவனுடைய வல்லமை தாமே வியாதியஸ்தரையும் அல்லல்படுகிறவர்களையும் எழுப்பி, அந்த ஒவ்வொரு இம்மியையும் சுகமாக்குவதாக. மகத்துவமான பரிசுத்த ஆவியானவரே, நான் இவர்களை உம்மிடம் ஒப்புவிக்கிறேன். எவ்வாறு செய்வது என்று எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டேன். இயேசுவின் நாமத்தில் நான் இவர்களை உம்மிடம் தருகிறேன். ** *****